Saturday, June 9, 2012

ஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் !!

  முன்குறிப்பு :: இப்பதிவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே .. யாரையும் குறிபிடுவன அல்ல !! 
              " Any resemblance to this in real life is purely co-incidence " 

              அது ஒரு பள்ளிக்கூடம் .. உலக மக்கள் அனைவரும் செல்ல ஏங்கும் ஒரு சொகுசு நகரத்தில் அமைந்துள்ள  பள்ளிக்கூடம், உயர்தட்டு மக்கள் மட்டுமே படிக்ககூடிய, பல நாட்டு பணக்கார வியாபார காந்தத்தின் வாரிசுகள் படிக்கும் பள்ளிக்கூடம். 



பள்ளி பருவத்தின் கடைசி கட்டமான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை ::            
        அங்கு படிக்கும் மாணவர்களின் ஒரே லட்சியம் அழகிய மாணவிகளை இம்ப்ரெஸ் செய்து, கடலை போட்டு டேட் செய்ய டேட் குறிப்பது.  அங்கே நடைபெற்றுகொண்டிருந்தது பிசிக்ஸ் வகுப்பு என்றாலும் மாணவிகளின் விழிகளில் மாணவர்கள் கெமிஸ்ட்ரியை  தேடிகொண்டிருந்தார்கள்.

அப்போது "excuse me, may i come in" என்ற தேன் குரல் கேட்டு, அனைவரது கழுத்தும் வாசல் பக்கம் திரும்பியது.

     அங்கே நின்றுகொண்டிருந்தாள் அவள். அவள்தான் இந்த கதையின் நாயகி என்றாலும் அவளது பெயர் இக்கதைக்கு தேவையில்லை. அவள் தான் அந்த வகுப்பின் அழகு ராணி..அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்காத மாணவர்கள் அங்கு இல்லை..அவளுக்கு எப்போதுமே தனது அழகின் மீது ஒரு கர்வம்...அவளை கடந்துசென்ற பின்னும் திரும்பிபார்க்கும் கண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போவதால் தனது அழகின் மீது பெருமை.   வாத்தி அனுமதி தந்ததும், தன்னையே  பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு ஏளன பார்வையை வீசிவிட்டு  ஒயிலாக வந்து தனது இருக்கையில் அமர்ந்தால்.. 

ஆனால் அவள் கண்களில் வழக்கமான தென்படும், குறுகுறுப்பு மிஸ்ஸிங். இதை அழகாக கண்டுபிடித்துவிட்டான் அவளை எப்படியாவது தனது பெண் நண்பர்கள் லிஸ்டில் சேர்த்துவிட துடிக்கும் "வாஷிங்டன்"  வின்சென்ட்!!

கிளாஸ் முடிந்ததும் நேராக அவளிடம் சென்ற   "வாஷிங்டன்"  வின்சென்ட், "ஹே ஸ்வீட்டி, இன்னிக்கு என்ன ரொம்ப டல்லா இருக்க" என்றான் ..

 அவள், " இல்ல வின்ஸ் ! எனக்கு வர வர ஹோம் வொர்க் செய்யவே பிடிக்கல, அதான் ஒரு ஹோம் வொர்க்கும் முடிக்கல, எந்த வாத்திட்ட மாட்ட போறேன்ன நெனச்சாலே பயமா இருக்கு"  என்றாள். 

" இவ்ளோதானே கவலைய விடு, உன் ஹோம் வொர்க்கும் சேர்த்து நாளைலேர்ந்து நான் செய்றேன் "..
 நிஜமாவா ?
 "கண்டிப்பா , டார்லிங் !!

அடுத்த நாள் அவளது வீட்டு பாடத்தை செய்து கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்த அவளுக்கு, அவனது மோசமான  கையெழுத்து திருப்தியை தராவிட்டாலும், முகத்தில் சிரிப்பை வரவழைத்து, "ரொம்ப தேங்க்ஸ் வின்ஸ்", பட் டெய்லி நீயே என் ஹோம் வொர்க்கும் பண்ணிடுவியா ? என்று சந்தேகமாக கெட்டாள்...

" sure , ஸ்வீடி " என்றான் வின்ஸ்

" சும்மா உன்ன வேலை வாங்கினா, எனக்கு கில்டியா இருக்குமே " 

சரி அப்ப, டெய்லி ஹோம் வொர்க் எழுத எனக்கு 10 கிஸ் கொடு..

இந்த வேலைக்கு பத்து கிஸ் ஜாஸ்தின்னு பீல்பன்னினாலும், வேறு வழியின்றி ஓகே சொன்னால் அவள் ..

இப்படியே சில நாட்கள் செல்ல, வின்ஸ் ஹோம் வொர்க் செய்ய, இவளும் தினமும் பத்து முத்தங்கள் அவனுக்கு தந்து வந்தாள்.  அன்று ஒரு நாள் எதேற்சியாக சக மாணவன், "அசின்ராம்ஜியின்" ஹோம் வொர்க் நோட்டை பார்த்தவள், அவனது கையெழுத்தின் அழகை கண்டு வியந்தாள்.
அசின்ராம்ஜிக்கு ரொம்ப நாலா, இவளின் ஹோம் வொர்க் ரகசியம் தெரியும். எப்படியாவது அந்த வெள்ளகாரநிடமிருந்து, இவளது ஹோம் வொர்க் செய்யும் வேலையை இவன் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.. 
                                  இதுதான் சமயம் என்று அசின்ராம்ஜி அவளிடம், " நான் உனக்கு ஹோம் வொர்க், செஞ்சு தரேன், நீ எனக்கு அஞ்சு கிஸ் குடுத்தா போதும்" என்று பிட்டு போட்டான். அருகில் இருந்த அவனது நண்பன் "டாட்டா கிர்லா" கூடவே இருந்து குழி பறிக்கும் ரகத்தை சேர்ந்தவன். சடாரென்று அவளிடம் "நான் உன் ஹோம் வொர்க்க மூணு கிஸ்ஸுக்கு செஞ்சு தரேன்" என்று ராம்ஜியை கிழட்டி விட பார்த்தான். அவுளுக்கோ இப்ப பயங்கர குழப்பம். இவங்க ரெண்டு பேர்ல யாருக்கு தருவது இந்த வேலையை என்று.

இவர்களுக்குள்  நடக்கும் பேச்சை, தள்ளி நின்று ஒட்டு கேட்டுகொண்டிருந்தான் அதே வகுப்பில் படிக்கும் "சாரயனகீர்த்தி". இவன் கொஞ்சம் மண்டைகாரன். எப்படியும் அவளிடம் இந்த வேலையை கைப்பற்றிவிட அந்த இடத்துலயே ஒரு திட்டம் போட்டு நேராக அவளிடம் வந்தான்.

இரண்டு முத்தத்திற்கு  இந்த டீலை நான் நடத்துகிறேன் என்று சொல்ல சாரயனகீர்த்தி வாயெடுக்க, அந்த நேரம் பார்த்து வகுப்பறையில் நுழைந்தான் சீனாகார "டோங்க்லீ".. ஆஹா இவன் வந்தா ரொம்ப சீப்பா இல்ல பண்ணிதருவான், ரெண்டு கிஸ்  கேட்டா வேலை ஆகாது என்று முடிவெடுத்த சாரயனகீர்த்தி, அவளிடம் திரும்பி  "நீ ஒரே ஒரு பிளையிங் கிஸ் மட்டும் குடு போதும், உன் ஹோம் வொர்க நான் டெய்லி செய்யறேன்" என்றான்.

ஒரு பிளையிங் கிஸ்ஸா என்று அவள் ஆனந்த அதிர்ச்சியில் கேட்க, இதை தவறாக புரிந்துகொண்ட நம்ம  சாரயனகீர்த்தி, வேணும்னா "Value added service ஆ"  , நாளைக்கு கிளாஸ்ல நடக்கற டெஸ்டுக்கு, உனக்கும் பிட்டும் சேர்த்து எழுதி வரேன், என்றான்..

அப்பறம் என்ன "டீல் ஓவர்"

இதையெல்லாம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஒரு மூளைக்காரன் ஆரம்பித்ததுதான் இன்று உலகெங்கிலும் கொடி கட்டி பறக்கும்  "BPO" எனப்படும் பிசினெஸ் ப்ராசெஸ் அவுட்சோர்சிங்

பின்குறிப்பு : சமிபத்தில் வெளியான "பொன்மாலை பொழுது" திரைப்பட பாடல் ஒன்றில் பள்ளி மாணவி பாடுவது போல் வரும் பாடலில் "ஹோம் வொர்க்கை அவுட்சோர்சிங் செய்த அழகி நாங்கள் " என்ற மதன் கார்கியின் வரிகளே எனது இந்த பதிவை எழுத தூண்டியது...





No comments:

Post a Comment