Sunday, November 27, 2011

உருமி - பாடல்கள் - செவிவிருந்து

சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ஆகஸ்ட் சினிமா  பேனர்  தயாரிப்பில், ஆர்யா, ப்ரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உருமி.
ஹாரிஸ் ஜெயராஜும், GV  பிரகாஷும் கேட்டு கேட்டு, சலித்துப்போன காதுகளுக்கு, செவிக்கினிமையாய் காதுக்கு விருந்தாய் வந்திருக்கும் பாடல்கள்.
இசை தீபக் தேவ், பாடல்கள் வைரமுத்து.
போஸ்டரை பார்த்தால்  பதினந்தான் நூற்றாண்டு கதை களம் போல் தெரிகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சமூகத்தை பற்றிய படைப்பாக இருக்கும் போல் தெரிகிறது.சரி நாம் பாடல்களுக்கு வருவோம்.

நட்பின் மேன்மை போற்றும் ஒரு பாடல், காதல் ரசம் சொட்ட ஒரு பாடல், மண்ணின் வீரம் போற்றும் ஒரு பாடல், தம் குலத்தின் பெருமை பேசும் ஒரு பாடல், பாலூட்டும் தாய், தாலாட்டில் மண்ணின் வீரத்தையும், மானத்தையும் சேர்த்து குழந்தைக்கு ஊட்டும் ஒரு பாடல், ஒரு பெண் அரசனை நோக்கி தன்னை காதல் புரிய அழைக்கும் ஒரு பாடல்.

அணைத்து பாடல்களிலும் வைரமுத்து சும்மா விளையாடி இருக்கிறார்...தீபக் தேவின் இசை வைரமுத்துவின் வரிகளுக்கு வைரம் சேர்த்திருக்கிறது.

சாம்பிள் வரிகள்  சில:

காதல் பூக்களின் வாசம்
உன் கூந்தல் முழுவதும் வீசும்
பார்வையின் படையெடுப்பில்
பாதங்களில் விழுந்திடும் தேசம்....

காமம் கடந்த முனிவன் கூட
உன் கண்கள் கடப்பது அரிது !!

மொத்தத்தில் பாடலை கேட்டவுடன் படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது...

லிங்க் டு டவுன்லோட் !!
http://www.123musiq.com/Urumi-Tamil.htm