Sunday, February 17, 2013

பிஸ்சா பர்கர்..அப்பறம் நம்ம சோளம்......

                  
  எங்கோ படித்தது...

 அமெரிக்காவில் இருந்து ஒரு கம்பெனி நம்மூரில் வந்து, பர்கர் மாமா, பர்கர் மச்சான், மஹாராஜா பேரன் -னு பெயரை மாத்திகிட்டு கடையை விரிச்சி கல்லா கட்டிகிட்டு இருக்காங்க. ஆனா... அந்தக் கருமங்களை இங்கிருந்து ஏன் துரத்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு அடுத்த முறை.. அந்த சுத்த பத்தமான வெஜ்/நான் வெஜ் பர்கர் கடிக்கும் போது கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.


ஒரு ஆரோக்கியமான மனிதன், தினம் மூன்று வேளை-ன்னு ஒரேயொரு மாதத்திற்கு மட்டும் McDonald's -ல் இருந்து சாப்பிட.. முதல் 5-10 நாளிலேயே... அவரை டெஸ்ட் செய்யும் டாக்டர்கள் எல்லாம் அரண்டு போவது போல, அவர் உடலில் மாற்றங்கள் ஏற்பட..., அதற்கடுத்த 10 நாளில்... அத்தனை டாக்டர்களும்.. அவரை கெஞ்சவே ஆரம்பிச்சிடுவாங்க. அந்த முப்பது நாட்களில்..கிட்டத்தட்ட அபாய எல்லையை எல்லாம் தாண்டுமளவுக்கு, தன் உடலில் மாற்றத்தைப் பார்ப்பார். அவர் செக்ஸ் வாழ்க்கை உட்பட!!! (இதைச் சொன்னாதானே... பயப்படுவீங்க)


இந்தியாவில் எந்த மூலையில் போய்.. McDonald's / Burger King பர்கரை கடிச்சாலும்.. ஒரே டேஸ்ட்தான். நம் நாட்டை விட மூணு மடங்கு பெரிய நாடு... மூலைக்கு மூலை.. இந்த புற்றீசல்கள் இருக்கும் அமெரிக்காவிலும்.. இதே போல.. ‘ஒரே தேசம்... ஒரே டேஸ்ட்’ -தான்.
இந்த ஒரே டேஸ்ட் எப்படி... ஒட்டு மொத்த நாட்டிற்கும் கிடைக்குது? 

முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?

 ஒவ்வொரு முறையும் என் மகளும், மகனும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க??

இந்த சீப் ஃபுட்-டின் சோர்ஸ் என்ன??????????????????

இதையெல்லாம் தெரிஞ்சிக்க.... நாம இன்னொரு விஷயத்தை தேடிப் போகணும். 1970-களில் அமெரிக்காவில் நடந்த விவசாயப் புரட்சி. நம்மூரில் வெகு சாதாரண விசயமாகக் கருதும் ஒரு மேட்டர். ஆனால்... அது ஒவ்வொரு அமெரிக்கனின் தலைமுடி வரைக்கும் பரவியிருக்குன்னா நம்புவீங்களா???
ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்



1970-களில் விவசாயப் புரட்சிங்கற பெயரில்... அரசாங்கம்.. விவசாயிகளை சோளம் பயிரிட சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதற்காக.. உங்களுக்கு தேவையோ.. இல்லையோ... ஒவ்வொரு ஏக்கருக்கும்... இத்தனை டாலர்ன்னு மானியம் கிடைக்க ஆரம்பிக்குது.




மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்... தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்... பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு. 


சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்... அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்... சோளத்தின்.. இன்னொரு சிறப்பு.......

......அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா... வாடா.... அத்தனையிலும் இருப்பது... சோளம் மட்டும்தான்!!


மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா...., பர்கர், சோடா... அவ்வளவு ஏன்.... உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.

அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்... உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா...., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்... கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???

ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே... சீக்கு பிடிச்சித் திரியும் போது... நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??

ஒரு ஹிடன் கேமராவில்..., இப்படி... நோயில் இறந்தக் கோழிகளைக் கூட... இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு... அதிலிருந்து... இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது..., இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்.. ஜம்முன்னு... இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.

இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு..., அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல..., அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி... சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க. 


நெசமா.. சொல்லுங்க.... நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????