Sunday, December 2, 2012

ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு

                  சந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம -  அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாம  ஒரு முழு நீல வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் இந்த காலத்தில் தரமுடியுமா ?
              
                முடியும் என்று அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்"   இயக்குனர் பாலாஜி தரநீதரன்.
                       ஹீரோ பேருதாங்க "விஜய்" சேதுபதி - ஆனா நல்லா நடிக்கறாரு - இவருக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் - ப்ரெண்ட்ஸ் கூட சேந்து சும்மா இல்லாம இல்லாம கிரிக்கட் விளையாட போறாங்க..அப்ப என்னாச்சின்னா பால் பிடிக்க போய் தடுக்கி விழுந்த ஹீரோ மண்டைல அடிபட்டு கடந்த ஒரு வருசமா நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்து போய்டுது. தன்னோட கல்யாணத்தையும் .சேத்து .

                எப்டி நண்பர்கள் குழு இவருக்கு வீட்ல யாருக்கும் இப்டி நடந்ததத சொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கறாங்க - இதான் கதை.


             கத்தி மேல் நடக்கும் திரைகதை - கொஞ்சம்  பிசகினாலும் ஒரு உலக தரம் வாய்ந்த மொக்கை படமாக அமைந்த்துவிடகூடிய சாத்தியகூறுகள் ஏராளம். ஆனாலும் தனது இயல்பான திரைகதையினால் இயக்குனர் அசத்தியிருக்கிறார்.. விஜய் மறதி காரணமா பல வசனங்கள திரும்ப திரும்ப பேச வேண்டிய அவசியம்.ஒவ்வொரு முறையும் அவர் அதே வசனத்த பேசும்போது சிரிப்பலை கூடிகொண்டே போவதே இதற்கு சாட்சி..

               படத்தில் இவருக்கு நண்பர்களாக வரும் "பக்ஸ்", "பஜ்ஜி" மற்றும் "சரஸ்" - இவர்கள் தான் தூண்..இந்த ஞாபகி மறதி பேசன்ட்ட வச்சிட்டு அவங்க அடிக்கற லூட்டிதான் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை "நான்- ஸ்டாப்"  கலக்கல் காமடி . இதில் நடிப்பில் கலக்கிஇருக்கும் பஜ்ஜி மற்றும் பக்ஸ் இனி நிறைய படத்துல பாக்கலாம்.


             படத்தின் ஹைலைட் - வசனம் - இயல்பான நடிப்பு - குறிப்பா அந்த கல்யாண மண்டப காட்ச்சியில் - நாளைக்கு தாலி கட்டபோகும் மனைவிய பாத்துட்டு நண்பரிடம் "ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு" என்று கேக்கும் இடத்தில் தியேட்டரே அலறுது...

           பின்னணி இசையும் - ஒளிபதிவும் - படத்துக்கு தேவையானவற்றை நிறைவா கொடுத்திருக்கு.கதைக்கு தேவையில்லாததால் பாடல் இல்லாதது ப்ளஸ்..

          ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பை தந்தாலும் - இது மாறி ஒரு காமடி படம் மீண்டும் வர பல நாட்கள் .காத்திருக்கணும் ..அதனால் மிஸ் பண்ணாம பாருங்க..Saturday, November 3, 2012

விளம்பரங்களின் வில்லத்தனம் !

           அடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..
           டேய், தில்லான மோகனாம்பாள்  படம் பாத்துருக்கயா ?
           இல்ல ..
          சிவாஜியையும் பத்மினியையும்நேர்ல பாத்துருக்கயா ?
          இல்ல
         அப்பறம் எத வச்சிடா இந்த மூஞ்சி சிவாஜி, அந்த மூஞ்சி பத்மினின்னு சொன்ன ? சொல்றா ..
           இவருதான் சொல்ல சொன்னாரு, ஆட்டம் நடக்குற ஊருக்கெல்லாம் வா, பத்து பத்து ரூவா தரேன், இந்த மாதிரி புகழ்ந்து பேசு, அதுவும் அந்த தவுளுகாரன் காதுல விழறமாதிரி சொல்லு ..
           நீ போ.. டேய், ஏன் உனக்கு இந்த வேலை- நீ வாங்கற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா ?
"ஒரு விளம்பரம்ம்ம்"

            இப்ப நான் சொல்ல வர்றதும் விளம்பரங்கள் பத்தி தாங்க.நமது தொலைக்காட்சி விளம்பரங்கள் எந்தளவுக்கு மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது, இல்லாத சில விசயத்த இருப்பதாக சொல்லி தொடர்ந்து நமது பர்சை பதம் பார்துகொண்டிருக்கிறது. ஒரு பொய்யை தொடர்ந்து பல முறை சொன்னா அதை உண்மை என்று மக்கள் நம்ப தொடங்கிவிடுவார்கள் என்பதை இந்த விளம்பர உலகம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கு.
        
           எங்க சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி நோடென்சன்னு சொல்றான் ஒருத்தன்,..டேய் ஏன்டா, ஏன் ? அப்ப மத்த சோப்பு போட்ரவங்கல்லாம் கையாள கக்கத்த சொறிஞ்சிட்டே திரியிரான்களா..ஆனா ஒன்னுடா, கடசிவரைக்கும் அந்த பத்து ஸ்கின் ப்ராப்ளம் என்னன்னு நீங்க சொல்லவே இல்லடா.          இந்த அழகு சாதனா பொருள் விக்கறவன் இம்சைதான் இருக்கறதுலயே பேரிம்ச.இவங்க பொருள யூஸ் பண்ணா ஒரே வாரத்துல சிவப்பாயிடலாமாம் .இத நம்பி, நம்ப ஊர் மக்களெல்லாம் அத வாங்கி மூஞ்சி புல்லா பூசிகிட்டு கருப்புமில்லாம சிகப்புமாகாம ஒரு வித்தியாசமான ஜந்து மாதிரி மூஞ்சில்லாம் சொறி வந்து திரிஞ்சிக்கிட்டுருக்காங்க."சிகப்பு என்பது அழகல்ல, நிறம்" என்று இவர்களுக்கு யார்தான் புரிய வைப்பது..


          இப்ப புது டிரென்ட் என்னன்னா, நம்ம மெடிகல் அசோசியேசன் கிட்ட அங்கீகாரம் வாங்கிக்கறது. அப்பறம் மருத்துவ ரீதியா இது உடம்புக்கு நல்லது அப்டீன்னு சொல்றது. நம்மூர்ல அறிவுரைக்கு அப்பறம் ஈசியா கிடக்கறது என்ன அப்டீன்னு கேட்டீங்கன்னா, இந்த மெடிகல் அசோசியேசன் அங்கீகாரம் தான். அஞ்சோ பத்தோ கொடுத்தா நம்ம டாஸ்மார்க்ள விக்கற சரக்கு கூட லிவருக்கு நல்லதுன்னு சர்டிபிகேட் கொடுப்பாங்க.

          எனக்கு தெரிஞ்சு இந்த வேலைய முதல்ல ஆரம்பிச்சது ஹார்லிக்ஸ் தான். "டாக்டர்கள் சிபாரிசு செய்வது" அப்டீன்னு சொல்லி விறபனைய உயர்திக்கிடாங்க. ஆனா அந்த டாக்டர போய் கேட்டா, "நோ, நோ, நான் சிபாரிசு செய்யவே இல்லையேன்னு" சொல்றாரு..

        இத பாத்துட்டு காம்ப்லான்காரன்  சொல்றான் இத குடிச்சீங்கன்ன சீக்கரம் உயரம் ஆவீங்கன்னு.. எங்க மம்மியும் எனக்கு சின்ன வயசுல காம்ப்ளான் தான் குடுத்தாங்க, ஆனா நான் அஞ்சடிக்கு மேல வளரவே இல்லையே. எதுக்கும் இப்ப நாலு பாட்டில் வாங்கி ட்ரை பண்ணி பாத்துடனும்..

          ஒரு டூத்பேஸ்ட் கம்பனிகாரன், நிஜமாவே சில டென்டிஸ்ட்கள கவர் பண்ணி, தன்னிடம் வரும் பல் நோயாளிகளை அவங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ண சிபாரிசு செய்ய வச்சிருக்கான். என் நண்பர் கூட அத நம்பி சில நாள் அந்த பேஸ்ட் யூஸ் பண்ணிட்டிருந்தார்.. மத்த டூத்பேஸ்ட்லாம் பத்து ரூவான்னா இவன் மட்டும் அம்பது ரூவாக்கு வித்துட்டிருந்தான் என்பது தான் இதில் கொடுமையான விஷயம்.

        மேல சொன்னது ஒரு சேம்பிள் தான். மொத்த விளம்பரத்தையும் பத்தி சொல்லனும்னா ஒரு மெகா சீரியலே எடுக்கணும். இது போன்ற போலியான விளம்பரங்களை தடுக்க நமது அரசு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது வேதனை..நாம் தான் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழுப்புடன் இருக்க வேண்டும்.

பின்குறிப்பு : இத்தளத்தில் உங்கள் விளம்பரங்களை இடம்பெற செய்ய அணுகவேண்டிய முகவரி ட்ரிபில்டபில்யு அட் ஈமெயில் டாட் காம். (www@email.com)

Sunday, October 21, 2012

பீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம் !

                  தாண்டவம், மாற்றான் என்று தொடர்ந்து வந்த மாஸ் படங்கள் சொதப்பிகொண்டிருக்க, அமைதியாய் வந்து அழகாய் அசத்தியுள்ளது பீட்சா. திரு குமரன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி  கலக்கல் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் பீட்சா.

               கொட்டும் மழையில் நனைந்துகொண்டே பீட்சா சாப்டா எப்டி இருக்கும்னு தெரியாது - ஆனா இந்த பீட்சா பாக்க கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே செல்லலாம்..ஷார்ட் பிலிம் புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பற்றி நான் சொல்வதை விட - யு ட்யுபில் நீங்களே போய் இவரது படங்களை பார்த்துகொள்ளுங்கள்.

            படத்தோட கதை என்னன்னா -"கத சரியானு மொக்க கதைங்க ஆனா நான் சொன்ன விதம் அப்டி" அப்டின்னு டைரக்டரே தில்லா சொல்லிடறாரு !    சொன்னாதோட மட்டுமில்லாம  அசத்தலான திரைகதை மூலம் அத நிரூபிச்சும் இருக்கார்.

          அதனால நாமளும் இங்க கதைய சொல்லாம விட்டுட்வோம்னு பாத்தா, கத சொல்லாம எப்டி விமர்சனம் எழுதறது.. அதனால் கதையின் சஸ்பன்ச போட்டுஉடைக்காம மேலோட்டமா கொஞ்சம் சொல்லலாம். படத்தோட ஹீரோ ஒரு சாதாரண பிஸ்ஸா சப்ளையர். அவரு ஹீரோயின் கூட ஒரு லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்றார். ரொம்ப கேர்புல்லா இருந்தும் கூட அவன் யூஸ் பண்ண காண்டம்ல இருந்த சின்ன ஓட்டல லீக்காயி ஹீரோயின் வயத்துல சைக்ளோன் பார்ம்  ஆயிடுது ..அதாங்க பேபி பார்ம்  ஆயிடுது..கல்யாணம் பண்ணிகறாங்க ..
       
             இதுக்கு இடையில ஒருநாள் பீட்சா டெலிவரி பண்ண போன வீட்ல ஹீரோ தனியா மாட்டிக்கறார்.. அங்க அடுத்தடுத்து கொலை விழுது..இதுக்கு மேல கத சொன்னா, டைரக்டர் என்ன ஓரு தனி பூத் பங்களால போட்டு அடைத்துவிடும் அபாயம் இருப்பதால் இதோட நிறுத்திக்குவோம் ..

          படத்தில் ஆரம்ப சில நிமடங்கள் கதாபாத்திரங்களை பற்றி கூற எடுத்துக்கொள்ளும் இயக்குனர், கிட்டத்தட்ட இருவதாவது நிமிடத்திலிருந்து கதைக்கு வர்றார் ..அதிலிருந்து படம் அதகளம் தான்..ஒரே இடத்தில் ஹீரோவை வைத்துகொண்டு அவர் ஆடியிருக்கும் த்ரில்லர் ஆட்டம் செம ..குறிப்பா அந்த நாப்பது நிமிட காட்சியில் ஒளிபதிவு  ஒலிபதிவு ஹீரோவின் அசத்தலான நடிப்பு நம்மை கட்டிபோடுகிறது ..

        பொதுவாக த்ரில்லர் படங்களை அமைதியாக பார்க்கும் நாம், அந்த நாற்பது நிமிட காட்சியில் கைதட்டவும்,ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்..அதுவும் இதுபோன்ற த்ரில்லர் படங்கள் என்னதான் சிறப்பாக இருந்தாலும் ரிபீட் ஆடியன்ஸ் வரவைப்பது கடினம்..இதில் பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளதால் ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என நம்புவோம்.

        அந்த பிட்சா ஒவ்வொருதுண்டாக காணமல் போகும் போது கைதட்டலில் திரையரங்கு அலறுகிறது..பைப் மூடியபின்னும் சொட்டும் தண்ணீர், ஸ்விட்ச் ஆப் செய்தும் சுற்றும் மின்விசிறி போன்ற ட்ரேட் மார்க் த்ரில்லர் பட காட்சிகள் இல்லாதது மேலும் சிறப்பு ..

       படத்தில் இரண்டு மிகபெரிய லாஜிக் ஓட்டைகள்..திரைகதையின்  சிறப்பால் இதை மறந்துவிடலாம். சென்னையில் மிக குறைந்த திரை அரங்குகளில் ரிலீசாகியிரும் பிட்சா, ஓரிரு நாட்களில் மாற்றான் காட்சிகளை அபகரிக்கும் என நம்பலாம்.

பைனல் பன்ச் : பிட்சா - தீவாளி வரை வெடிக்கபோகும் பட்டாசு ..

Sunday, July 29, 2012

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!.

               லிங்குசாமி  தயாரிப்பில் "மைனா" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் "கும்கி". இதன் பாடல்கள் இரு நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சொக்க வைக்கும் மெலோடிகலாக அனைத்தும் அருமை. 


எல்லா ஊரும் எங்களுக்கு !
           படத்தின் கதையையும், நாயகனின் கதாபாத்திரத்தையும் மேலோட்டமாக சொல்லும்படி அமைந்துள்ள இந்த பாடல் கேட்டவுடனே படத்தின் காட்சியமைப்புகள் எப்படி இருக்கும் என்று நாமாக கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும், அழகான ஓபனிங் சாங்.
 
அய்யய்யய்யோ  ஆனந்தமே !(Violin and female)..
                       ஆரம்பத்தில் மிதமாக ஆரம்பிக்கும் வயலின் இசையை கேட்கும்போது உள்ளுக்கும் ஒரு ஆனந்தம் பரவுகிறது, பின்னர் அதனுடன் அதிதி பாலின் குரலும் யுகபாரதியின் வரிகளும் சேரும்போது அப்படியே பரமானந்தம். காதலன் காதலியுடன் ஒரு அழகான கேண்டில் லைட் டின்னரில், மிதமான ஒலியில் இப்பாடல் கேட்டால் ஒரு ரம்மியமான(Romantic) இரவாக அது  அவர்களுக்கு அமையும்.
 
எப்போ புள்ள சொல்ல போற :
      எங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும், இதுவும் ஒரு மிதமான மெலடி !
 
சொல்லிட்டாலே அவ காதல :
        ஒரு பாடல் சிறப்பாக அமைய, ஸ்ரேயா கோஷலின் பீர் சொட்டும் குரலே போதுமானது. இதில் இசையும் வரிகளும் கூடுதல் சிறப்பை சேர்க்க, ஒரு அழகான மெலடி டூயட். 

ரசித்த வரிகள் :
     அப்பன் சொல்ல கேட்கல 
     அம்மா சொல்ல  கேட்கல
      நீ சொல்ல கேட்டேன்,
     ரெண்டு பேர நேருல பாத்தேன்,

இது வரை காதலியை தாயோட மட்டுமே ஒப்பிட்டு வந்தார்கள், இதில் தந்தையுடனும் ஒப்பிட்ட யுகபாரதியின் வரிகள் புதுசு தான !!
 
கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!
        "இமான் - யுகபாரதியின்" மிரட்டும் கூட்டணியில் என்று இனி இவர்கள் போட்டுகொள்ளலாம், சும்மா ரெண்டு பேரும் போட்டி போட்டு பிச்சு உதறியிருக்கிரார்கள்.. பாடலின் முதல்  வரிகளே சொல்கிறதே இதில் யுகபாரதியின் சிறப்பை, கடைசி வரி வரை அனைத்தும் அசத்தல்.  இமானும், இப்பாடலின் ஒட்டு மொத்த ஸ்கோரையும் யுகாவே தட்டி சென்றுவிடக்கூடாது என்று புது புது ஒலிகளுடன் ஒரு வித்தியாசமான இசையை தந்திருக்கிறார். FM உலகை இந்த பாடல் சில நாட்கள் ஆட்சி செய்யும் என்றால் அது மிகையல்ல ! 
 
      மேலும் இரு அழகிய பாடல்களுடன்  இதை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்க வேணாம், கூகுளாண்டவர் உதவியை நாடவும் !

Sunday, July 8, 2012

நான் ஈ - சரவெடி பட்டாசு !!

நான் இதுவரை ஒரு படத்தை இத்தனை பேர் இவ்வளவு புகழ்ந்து எழுதி படித்ததில்லை !! பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு !!

Cable sankar : http://www.cablesankaronline.com/2012/07/eega.html

Karki : http://www.karkibava.com/2012/07/blog-post_08.html

நெல்லை நண்பன்  : http://www.nellainanban.com/2012/07/fly-that-flies-high.html

Oho production : http://ohoproduction.blogspot.in/2012/07/blog-post_07.html 

Madras bavan :  http://www.madrasbhavan.com/2012/07/blog-post_07.html

Senthil CP :  http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html

Mine : http://www.sathivenkat.blogspot.in/2012/07/blog-post.html


DONT MISS IT !!!

Saturday, July 7, 2012

நான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் !

                  மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடும் படங்கள் பல.எஸ்.எஸ்.ராஜமெளலி தெலுங்கில் மாஸ் இயக்குனர், இது வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் அங்கு மெகா ஹிட். அதில் நான் பார்த்தது மகதீரா, மரியாதை ராமண்ணா மட்டுமே. மொழியே புரியாமல் பார்த்தும், இரண்டுமே என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே  ராஜமெளலியின் தீவர விசிறியாகிவிட்டேன்.
                  நான் ஈ ட்ரைலர் பார்த்ததுமே என்னை மிரள வைத்தது. ட்ரைலர் ரிலீஸ் ஆனா நாளிலிருந்தே, ஒவ்வொரு வெள்ளியும் இந்த வாரம் ரிலீஸ் ஆயிடுச்சா என்று பார்த்துகொண்டிருந்தேன், மிக நீண்ட காத்திருப்புக்குப்பின் அந்த நாள் நேற்று வந்தது.           கதை என்ன என்று ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் தெரியும்.  தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன்.காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை.
                பல முறை பார்த்து புளித்துபோன சாதாரண பழி வாங்கும் கதை தான்.  ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நம்மை கட்டிபோட்டு கலக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுவதும் சீட்டின் நுனியில் அமர்ந்தே படத்தை ரசித்தேன்.
             இது போன்ற காதல் மையமாக உள்ள படங்களில், காதலில் ஆழம் மிக முக்கியம். ஹீரோ ஹீரோயின் இருவருக்குமிடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கு நேரம் ஒதுக்க இயக்குனருக்கு கிடைத்து கிட்டத்தட்ட 15  நிமிடங்கள் மட்டுமே. படம் ஆரம்பித்த அரை மணிக்குள் ஹீரோ வில்லனால் கொல்லபடுகிறார். கிடைத்த 15  நிமிடத்தில் இவர்களின் காதலை முடிந்தவரை அழுத்தமாக சொல்லியிருக்கிறார், குறிப்பாக கண்களிலே சொல்லும் சமந்தாவின் காதல் அழகு.
                   ஒரு சாதாரண  ஈ , மனிதனை அதிகபட்சம் எந்தளவுக்கு இம்சிக்க முடியும் ? காதுகளில் வந்து ரீங்காரம் மட்டுமே இசைக்க முடியும். படத்தில் பல இடங்களில் மிகபெரிய லாஜிக் ஓட்டைக்கு வாய்பிருந்தும் , முடிந்தளவு அனைத்து காட்சிகளிலும் லாஜிக்காக நம்ப வைத்திருக்கிறார், என்னை பொறுத்தவரை லாஜிக் ஓட்டை இல்லாமல் கமர்சியல் படங்களில் வந்ததில்லை. லாஜிக் மீறல்களை தாண்டி நம்மை கட்டிபோடும் படங்களே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தில் லாஜிக் மீறல் காட்சிகளில் கூட கைதட்டல் பெரும் அளவுக்கு திரைகதையை செதுக்கியிருக்கிறார்.
                          படத்தின் நிஜ ஹீரோ "கிராபிக்ஸ்", "பின்னணி இசை", "வில்லன்", மற்றும் "சமந்தா".  எந்திரன் கிராபிக்ஸ் ஏற்படுத்தாத பாதிப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியின் பின்னணி இசை அருமை. வில்லன் நடிப்பு அட்டகாசம், பேசும்போது மட்டும் நாம் டப்பிங் படம் பார்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது, சமந்தாவும் அழகாக வந்து  அழகான முக பாவனைகளில் நம்மை கவர்கிறார். கார்கியின் வரிகளில் இரு பாடல்கள் நலம். வசனம் கிரேசி மோகன், ஓரிரு இடங்களை தவிர, அவரின் வழக்கமான சாயல் இல்லாமல் சிறப்பாகவே இருக்கிறது. 

            பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!


Sunday, June 17, 2012

டிவிட்டரில் சுட்டது !!

1)டீ கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ வித்துச்சுன்னு கணக்கு போடறவர் தானே டீடோட்டலர் ??

2)போதும் என்ற மனமே ஹாங் ஒவருக்கு மருந்து #சரக்குத்துவம்

3)புதன் கிழமைகளில் நீ மௌன விரதம் இருக்கிறாய்; முதன் முறையாய் வருடத்திற்கு 52 புதன் கிழமை மட்டுமே இருப்பதற்கு வருந்துகிறேன் !!

4)ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறப் போகும் சச்சின் # தல, அந்த ஆள் அடிக்கடி சோறு கேட்டு வருவான், வீட்டுக்குள்ள உட்றாத..

5)தம்பி ராசாவை சந்தித்தது மகிழ்ச்சி - கருணாநிதி # புரில? விடிய விடிய கத கேட்டாலும் கனிமொழிக்கு ராசா சித்தப்பாங்குறாரு

6)தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த் #எங்க அத நீங்க செஞ்சு காட்டுங்க மொதல்ல !!

7)சோப்புப் போட்டுக் குளிப்பதை விட தாப்பாழ் போட்டுக் குளிப்பதே முக்கியமானது

8)பல் தேய்க்கும் பழக்கம் மட்டும் இல்லையெனில் மிகவும் குழம்பி விடும் எழுந்ததும் என்ன செய்வது என்று?

9)மோதலில் காதல் பிறக்கிறது - காதலுக்கு பிறகான தொடர் மோதல்களில் பிறப்பதுதான் - கள்ளக்காதலோ ?

10)படுத்தவுடன் தூங்கினால் நிம்மதி, இல்லையென்றால் சந்ததி.

11)கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்க்கும்போது ராசியப்பன் பாத்திரக்கடை தான் நினைவுக்கு வருகிறது

12)குழந்தைகளுக்கு காதலி பேரு வைக்கிறது பழசுனாலும் தனி கிக்குதான். ஆனா வர்றவ டசன் புள்ளைங்கள பெத்துக்க ஒத்துக்கணுமே

13)கார்னர் சீட் கிடைத்த இரண்டு காதலர்களை சில்மிஷம் பன்ன விடாமல் திரையிலே கட்டி போடும் சினிமாவே நல்ல சினிமா !!

14)You can look at a figure. But u shud not look அட்டு figure.

15)பொண்ணுங்க பத்து பேரு நடந்து போனாலும் PARALLEL லா தான் போறாங்க பின்னாடி வர்றவங்க எக்மோர் சுத்தி தான் போகணும் போல

16)மனிதன் இருக்கும் வரை மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான், மரங்கள் இல்லாத போது மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும்

17)ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையா ? கம்ப்யூட்டர் ஷட்டவுன் பண்ணிட்டு, ஒழுங்கா நம்ம வேலைய பாக்குறது தான்...!!!

18)இப்போதைக்கு தமிழ் நாட்டில் சிறந்த தானம் - சந்தானம் !!

19)இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
"இன்னாபா, இப்புடி செஞ்சிட்டியே' என்று கேட்டு விடல்.

Sunday, June 10, 2012

Facebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes !!!

       " பொன்மாலை பொழுது " - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன் அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின் இசையில் இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

        எந்திரனிலும், அஸ்க்  லஸ்காவிலும்  ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி  "பு"க்கு  பிறந்தது "பூ"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்திலும் கார்கி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். சில இடங்களில் இசையின் இரைச்சலால் வரிகள் புரியாமல் போனாலும், சிறப்பாகவே இசை அமைத்திருக்கிறார் சத்யா.

வாற்கோதுமைக்கள் ::
       வாரக்கடைசியை கொண்டாட போகும்போது ஒரு இளமை துள்ளும் பாடலி இயக்குனர் கேட்க, அதுவும் நல்ல தமிழ் வரிகளாய் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரியப்பட, பாடலின் ஆரம்ப வார்த்தையே வாற்கோதுமைக்கள். இதுவரை பீருக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு யாரவது யோசிச்சிருகான்களா தெரியல, கார்கி அழகாக அதை வாற்கோதுமைக்கள் என்று தமிழ்படுத்திருக்கிறார் .  இதில் நம்மை கவரும் வரிகள் சில ..


வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்

கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!
 
 நீ  இன்றி  கிடக்கும் :
          என்னை மிகவும் கவர்ந்த பாடல், அந்தாதி ஸ்டைலில், முதல் வரியின் கடைசி வார்த்தையில் அடுத்த வரியின் முதல் வார்த்தையாய் துவங்கி அசத்தியிருப்பார். இதில் இசையும் அருமை. "ஏன் பாட்டைநிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் கரைய ஓடோடி வந்திருக்கும் என்னை பார்த்ததும், ஏன் நிறுத்திவிட்டாய், பாடு சாந்தா, பாடு " என்று ஒரு பழைய பாடலில் கூறுவது போல், இந்த பாடல் இரண்டே நிமிடத்தில் முடிந்துவிடுவது மிகுந்த ஏமாற்றம்"
 
ரசித்த வரிகள்:
 
நீ  இன்றி  கிடக்கும்  இருக்கை  அருகே 
நெஞ்சம்  ஏனோ  தவழுது  
 
தவளை  கிணறாய்  சுருங்கும்  உலகம்
கொஞ்சம்  மெதுவாய்  சுழலுது
 
சுழலின்  உள்ளே  உறங்கும்  மீனாய் 
வகுப்பில்  நானும்  இருக்கிறேன்  
 
அடிகடி  முடி  களைவதில் : 
 
    இந்த பாடலில் நம்மை ஈர்ப்பவர் இசை அமைப்பாளர். அழகான மெலடி கலந்த பீட் ..

இதழ்  கோர்த்து  கோர்த்து  அட  நடக்கையில் 
வலி  தீர்ந்து  தீர்ந்து  உடன்  பறக்கிறேன் 
உடல்  வாசம்  வாசம்  வந்து  கரைகிறேன் 
இடை  தீர்ந்த  போதும்  அட  காண்கிறேன் 
மெல்ல  மெலிகிறேன் 
கொஞ்சம்  உறைகிறேன் 
 

Reebokல ஸ்கூல சுத்துற:
         கல்லூரி பெண்கள் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில், கார்கியின் வரிகள் அருமையோ அருமை. facebook  twitter  என்று கரண்ட் ட்ரெண்டை அழகாக உபயோகபடுதிருப்பார்.

ரசித்த வரிகள்:


ATM கார்டுக்கும்
boyfriend ஆகும் லூசுக்கும்
வித்தியாசம் என்னென்னென்னு பாப்போம்

ஷாப்பிங் மால் கூட்டிப்போய்
வெக்கமெல்லாம் இல்லாம
mannequin போட்டதெல்லாம்  கேப்போம்

mannequin - அர்த்தம் தெரியாதவர்கள், கூகிள் உதவியை நாடவும். நானும் அததான் செய்தேன். அர்த்தம் தெரிந்ததும் அசந்தேன் !!

இதில் உச்சபட்ச highlight ஆகா, அவர் எழுதிய வரிகள் தான்..


Facebookல அச்சுன்னு தும்மினா
thousand likes மசாலா  சிக்ஸ்

homework எல்லாம் outsource பண்ணுற
OMG மசாலா சிக்ஸ்

பெண்கள் facebookல தும்மினாதான் 1000  likes , ஆனால் கார்கி இனி நீ login  மட்டும் செய்தாலே எனது 1000  likes ..
 
பாடகளை டவுன்லோட் செய்ய : 
 

Saturday, June 9, 2012

ஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் !!

  முன்குறிப்பு :: இப்பதிவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே .. யாரையும் குறிபிடுவன அல்ல !! 
              " Any resemblance to this in real life is purely co-incidence " 

              அது ஒரு பள்ளிக்கூடம் .. உலக மக்கள் அனைவரும் செல்ல ஏங்கும் ஒரு சொகுசு நகரத்தில் அமைந்துள்ள  பள்ளிக்கூடம், உயர்தட்டு மக்கள் மட்டுமே படிக்ககூடிய, பல நாட்டு பணக்கார வியாபார காந்தத்தின் வாரிசுகள் படிக்கும் பள்ளிக்கூடம். பள்ளி பருவத்தின் கடைசி கட்டமான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை ::            
        அங்கு படிக்கும் மாணவர்களின் ஒரே லட்சியம் அழகிய மாணவிகளை இம்ப்ரெஸ் செய்து, கடலை போட்டு டேட் செய்ய டேட் குறிப்பது.  அங்கே நடைபெற்றுகொண்டிருந்தது பிசிக்ஸ் வகுப்பு என்றாலும் மாணவிகளின் விழிகளில் மாணவர்கள் கெமிஸ்ட்ரியை  தேடிகொண்டிருந்தார்கள்.

அப்போது "excuse me, may i come in" என்ற தேன் குரல் கேட்டு, அனைவரது கழுத்தும் வாசல் பக்கம் திரும்பியது.

     அங்கே நின்றுகொண்டிருந்தாள் அவள். அவள்தான் இந்த கதையின் நாயகி என்றாலும் அவளது பெயர் இக்கதைக்கு தேவையில்லை. அவள் தான் அந்த வகுப்பின் அழகு ராணி..அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்காத மாணவர்கள் அங்கு இல்லை..அவளுக்கு எப்போதுமே தனது அழகின் மீது ஒரு கர்வம்...அவளை கடந்துசென்ற பின்னும் திரும்பிபார்க்கும் கண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போவதால் தனது அழகின் மீது பெருமை.   வாத்தி அனுமதி தந்ததும், தன்னையே  பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு ஏளன பார்வையை வீசிவிட்டு  ஒயிலாக வந்து தனது இருக்கையில் அமர்ந்தால்.. 

ஆனால் அவள் கண்களில் வழக்கமான தென்படும், குறுகுறுப்பு மிஸ்ஸிங். இதை அழகாக கண்டுபிடித்துவிட்டான் அவளை எப்படியாவது தனது பெண் நண்பர்கள் லிஸ்டில் சேர்த்துவிட துடிக்கும் "வாஷிங்டன்"  வின்சென்ட்!!

கிளாஸ் முடிந்ததும் நேராக அவளிடம் சென்ற   "வாஷிங்டன்"  வின்சென்ட், "ஹே ஸ்வீட்டி, இன்னிக்கு என்ன ரொம்ப டல்லா இருக்க" என்றான் ..

 அவள், " இல்ல வின்ஸ் ! எனக்கு வர வர ஹோம் வொர்க் செய்யவே பிடிக்கல, அதான் ஒரு ஹோம் வொர்க்கும் முடிக்கல, எந்த வாத்திட்ட மாட்ட போறேன்ன நெனச்சாலே பயமா இருக்கு"  என்றாள். 

" இவ்ளோதானே கவலைய விடு, உன் ஹோம் வொர்க்கும் சேர்த்து நாளைலேர்ந்து நான் செய்றேன் "..
 நிஜமாவா ?
 "கண்டிப்பா , டார்லிங் !!

அடுத்த நாள் அவளது வீட்டு பாடத்தை செய்து கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்த அவளுக்கு, அவனது மோசமான  கையெழுத்து திருப்தியை தராவிட்டாலும், முகத்தில் சிரிப்பை வரவழைத்து, "ரொம்ப தேங்க்ஸ் வின்ஸ்", பட் டெய்லி நீயே என் ஹோம் வொர்க்கும் பண்ணிடுவியா ? என்று சந்தேகமாக கெட்டாள்...

" sure , ஸ்வீடி " என்றான் வின்ஸ்

" சும்மா உன்ன வேலை வாங்கினா, எனக்கு கில்டியா இருக்குமே " 

சரி அப்ப, டெய்லி ஹோம் வொர்க் எழுத எனக்கு 10 கிஸ் கொடு..

இந்த வேலைக்கு பத்து கிஸ் ஜாஸ்தின்னு பீல்பன்னினாலும், வேறு வழியின்றி ஓகே சொன்னால் அவள் ..

இப்படியே சில நாட்கள் செல்ல, வின்ஸ் ஹோம் வொர்க் செய்ய, இவளும் தினமும் பத்து முத்தங்கள் அவனுக்கு தந்து வந்தாள்.  அன்று ஒரு நாள் எதேற்சியாக சக மாணவன், "அசின்ராம்ஜியின்" ஹோம் வொர்க் நோட்டை பார்த்தவள், அவனது கையெழுத்தின் அழகை கண்டு வியந்தாள்.
அசின்ராம்ஜிக்கு ரொம்ப நாலா, இவளின் ஹோம் வொர்க் ரகசியம் தெரியும். எப்படியாவது அந்த வெள்ளகாரநிடமிருந்து, இவளது ஹோம் வொர்க் செய்யும் வேலையை இவன் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.. 
                                  இதுதான் சமயம் என்று அசின்ராம்ஜி அவளிடம், " நான் உனக்கு ஹோம் வொர்க், செஞ்சு தரேன், நீ எனக்கு அஞ்சு கிஸ் குடுத்தா போதும்" என்று பிட்டு போட்டான். அருகில் இருந்த அவனது நண்பன் "டாட்டா கிர்லா" கூடவே இருந்து குழி பறிக்கும் ரகத்தை சேர்ந்தவன். சடாரென்று அவளிடம் "நான் உன் ஹோம் வொர்க்க மூணு கிஸ்ஸுக்கு செஞ்சு தரேன்" என்று ராம்ஜியை கிழட்டி விட பார்த்தான். அவுளுக்கோ இப்ப பயங்கர குழப்பம். இவங்க ரெண்டு பேர்ல யாருக்கு தருவது இந்த வேலையை என்று.

இவர்களுக்குள்  நடக்கும் பேச்சை, தள்ளி நின்று ஒட்டு கேட்டுகொண்டிருந்தான் அதே வகுப்பில் படிக்கும் "சாரயனகீர்த்தி". இவன் கொஞ்சம் மண்டைகாரன். எப்படியும் அவளிடம் இந்த வேலையை கைப்பற்றிவிட அந்த இடத்துலயே ஒரு திட்டம் போட்டு நேராக அவளிடம் வந்தான்.

இரண்டு முத்தத்திற்கு  இந்த டீலை நான் நடத்துகிறேன் என்று சொல்ல சாரயனகீர்த்தி வாயெடுக்க, அந்த நேரம் பார்த்து வகுப்பறையில் நுழைந்தான் சீனாகார "டோங்க்லீ".. ஆஹா இவன் வந்தா ரொம்ப சீப்பா இல்ல பண்ணிதருவான், ரெண்டு கிஸ்  கேட்டா வேலை ஆகாது என்று முடிவெடுத்த சாரயனகீர்த்தி, அவளிடம் திரும்பி  "நீ ஒரே ஒரு பிளையிங் கிஸ் மட்டும் குடு போதும், உன் ஹோம் வொர்க நான் டெய்லி செய்யறேன்" என்றான்.

ஒரு பிளையிங் கிஸ்ஸா என்று அவள் ஆனந்த அதிர்ச்சியில் கேட்க, இதை தவறாக புரிந்துகொண்ட நம்ம  சாரயனகீர்த்தி, வேணும்னா "Value added service ஆ"  , நாளைக்கு கிளாஸ்ல நடக்கற டெஸ்டுக்கு, உனக்கும் பிட்டும் சேர்த்து எழுதி வரேன், என்றான்..

அப்பறம் என்ன "டீல் ஓவர்"

இதையெல்லாம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஒரு மூளைக்காரன் ஆரம்பித்ததுதான் இன்று உலகெங்கிலும் கொடி கட்டி பறக்கும்  "BPO" எனப்படும் பிசினெஸ் ப்ராசெஸ் அவுட்சோர்சிங்

பின்குறிப்பு : சமிபத்தில் வெளியான "பொன்மாலை பொழுது" திரைப்பட பாடல் ஒன்றில் பள்ளி மாணவி பாடுவது போல் வரும் பாடலில் "ஹோம் வொர்க்கை அவுட்சோர்சிங் செய்த அழகி நாங்கள் " என்ற மதன் கார்கியின் வரிகளே எனது இந்த பதிவை எழுத தூண்டியது...

Sunday, May 27, 2012

உறுமி - தெளியவைக்கும்

         உறுமி படத்தின் பாடல்கள் வெளி வந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து மிக நிதானமாக இந்த வாரம் படம் வெளிவந்திருக்கிறது.  இப்படத்தின் பாடல்களை அப்போதே கேட்டு, மிகவும்  பிடித்திவிட, கண்டிப்பாக இதை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.
          இந்த வாரம் திடீரென்று எந்த விளம்பரமும் இல்லாமல்  ரிலீஸ்    ஆகிவிட , நேற்று இஷ்டம் படம் போகலாம் என்று அதன் விமர்சனங்களை படிக்க நெட்டை நோண்டினேன். அப்போத்துதான் தெரிந்தது இது வெளியான விஷயம். இஷ்டம் விமரசனங்களும் ரசிக்கும்படி இல்லாததால் கமலாவில் இதை புக் செய்தேன்.  சனிநீரடு என்று ஔவையாரே சொல்லியுள்ள காரணத்தினால், படத்திற்கு செல்வதற்கு முன் அருகில் உள்ள பாரில் சிறிது நீராடிவிட்டு செல்ல முடிவெடுத்தோம்.
        பாதி மப்பில் இருக்கும்போதுதான்  ஞாபகம் வந்தது, ஆஹா தண்ணியடிச்சுட்டு போன உள்ள விடமாட்டங்கலே என்பது. சரி சமாளிப்போம் என்று முழுதாக நீராடிவிட்டு கிளம்பினோம். 

 வாசலில் செக்யூரிட்டி செக் செய்யும்போது வாசம் வராமலிருக்க வாயை அனுமார் மாதிரி நல்லா இருக்க மூடிகொண்டிருக்க, அங்கே கடந்துபோன சிறுவன் ஐ கொரங்கு பொம்மை என்று சொன்னது என்னைத்தான் என்பது அந்த மப்பிலும் தெளிவாக புரிந்தது.

 ஒருவழியாக செக்யூரிட்டி இடம்  தப்பித்து உள்ளே போய் அமர்ந்தோம்.திரையில் சிலபல விளம்பரங்களுக்கு பிறகு படம் ஆரம்பித்தது.

பிரபுவும் ப்ரித்வியும் ஏதோ ஒரு பாடலுக்கு ஆடிகொண்டிறக்க, யாரோ ஒருவர்  அவரிடம், அவரது மூதாதையர் நிலத்தை ஒரு MNC  கம்பனிக்காக வாங்க வருகிறார்கள். ப்ரித்வியும் நிலத்தை விற்க ஒத்துக்கொண்டு அங்கு இருக்கும் ஆட்களை காலிசெய்ய வைக்க ஊருக்கு கிளம்புகிறார்.

ஊரில் அங்கு வசிக்கும் ஆதிவாசி கூட்டத்தை(?) சார்ந்த ஆர்யா , ப்ரித்வியின் முன்னோர் பெருமையை சொல்ல ஆரம்பிக்கிறார். கத 15  ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அதுக்கப்பரும்  ஒரு  20  நிமிஷம் ஒரு எழவும் புரியல. ஒருவேள மப்புல இருந்ததால் எனக்கு மட்டும் தான் புரியலையா ? இல்ல உங்களுக்கும் புரியலையா ? படிக்கறவங்க கமெண்ட் போடுங்க ப்ளீஸ் !!ஆனா ஒன்னு அடிச்ச மப்பு புல்லா தேளிஞ்சிடுச்சு..

அப்பறம் ஒருவழியா, வாஸ்கோடகாமா, சிராக்கள் அரசன் .. நாட்ட ஆள வந்தான்  .. ப்ரித்வியோட அப்பாவ  கொன்னான் .. அவன ப்ரித்வி பழி வாங்கினான் .. அதனால் யாரும் நிலத்த வெள்ளைகாரனுக்கு விக்காதீங்க , குறிப்பா MNC  காரனுக்கு விக்காதீங்க.. அப்டீன்னு  படம் முடியுது ..

 படத்தின் ஆறுதல்கள் சில ..

ஒளிபதிவு .. ஆஹா அருமை .. கண்ணுக்கு நல்ல விருந்து...
ஹீரோயின்கள்  இருவரும் கொள்ளை அழகு.. குறிப்பாக நித்யா மேனன் ...
பிரபுதேவா .. ரொம்பவே பொறுமையை சோதிக்கும் திரைக்கதைக்கு .. இவர் ஆங்காங்கே, கொஞ்சமே கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி ...ரசிக்க வைக்கிறார்..

எப்படா படம் முடியும் என்று காத்திருந்து.. விட்டவுடன் எழுந்து ஓடி வந்தேன். வாசலில் அதே செக்யூரிட்டி..ச்ச, போகும் போதே இவன் ஒழுங்கா, நான் மப்புல இருக்கறதா கண்டுபுடிச்சு " சாரி சார், ட்ரிங்க்ஸ் சாப்டு இருந்தா உள்ளே விடமுடியாது " அப்டீன்னுசொல்லிருந்தா .. இப்படி அவஸ்தபடிருக்க வேண்டாமே என்று நொந்துகொண்டே  ... பைக்கை ஸ்டார்ட் செய்தேன்..

Monday, March 12, 2012

சாத்தான்களின் வேதம் !!

          "ஊருக்குள்ள ஒரு ஜாதி கலவரத்த நாமளே தூண்டி விடனும், அத அடக்க ஒரு கமிட்டிய போடணும், அதுக்கு நானே தலைவன் ஆகணும்" - அமைதிபடை படத்தில் சத்யராஜ் பேசும் ஒரு வசனம்.
          அடடே, சமைச்ச ஆட, இலைல வச்சி சாப்பிடுவீங்க, சாப்டதுக்கப்பரம் அந்த இலைய ஆட்டுக்கே போடுவீங்க, என்னே மனித நேயமடா !! - விவேக் ஒரு படத்தில் பேசும் நகைச்சுவை வசனம்.   
         நேற்று விஜய் டிவியில், நீயா நானா பார்க்கும்போது இதெல்லாம் நினைவிற்கு வந்தது.சப்ஜெக்ட் என்னன்னா, டிவி சீரியல்கள் மக்களை, எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது ! இடையிடயே தொலைகாட்சியில் வரும் ஆபாச நிகழ்சிகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருந்தது. கோபி மிகவும் சீரியசாக, தனியார் தொலைகாட்சிகள்  நமது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஆபாசத்தை பற்றி சாடிக்கொண்டிருந்த்தார்.
           என்னை போறுத்தவரையில், விஜய் டிவி வருவதற்கு முன்பு தனியார் தொலைகாட்சிகளின் தரம் அப்படி ஒன்றும் மெட்சும்படியாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நாகரீகத்துடன், ஆபாச கலப்பில்லாமல் இருந்தது.
               தனியார் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளின் தரத்தை நாம் இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். "வி முன்" , "வி பின்" - விஜய் டிவி வருவதற்கு முன், விஜய் டிவி வந்ததற்கு பின். விஜய் டிவி வரும் முன், பெரும்பாலான நிகழ்சிகள் சினிமா சார்ந்தவையாகவே இருந்தது. இதுதவிர மாலை வேலையில் சில சீரியல்களையும் ஒளிபரப்பி வந்தனர்.  
             விஜய் டிவி வந்த பின், தொலைக்காட்சி நிகழ்சிகள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. ரியாலிட்டி ஷோ, எனும் பெயரில் இவர்கள் நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் கூத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜோடி நம்பர் 1 , என்னும் நிகழ்ச்சி மூலமாக,  இவர்கள்தான் முதல்தலில் ஆபாசகூத்தை நமது இல்லங்களில்  கொண்டுசேர்த்தனர். இன்று இவர்களே இதற்கு எதிரானவர்கள் போல் ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் போல் காட்டிகொல்கின்றனர். "ஆஹா, உங்கள் சமூக பொறுப்புணர்ச்சியை நினைத்தால் மெய் சிலிர்கிரேதே"
         சில நாட்கள் தூங்கிக்கிடந்த "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியையும் தூசி தட்டி புது பொலிவுடன் ஆரம்பித்துவிட்டனர். இதில் SMS மூலம் இவர்கள் சம்பாதித்த  கோடிகளும், கேட்கப்படும் கேள்விகளும் சமீப நாட்களாக இனைய தளங்களை  நாரடித்துகொண்டிருக்கிறது.  
         யார் கண்டார், நாளைக்கு இவர்களே "அவனா இவனா" என்றொரு நிகழ்ச்சி நடத்தி அதில் நீயா நானாவின் போலித்தனத்தையும், கோடி நிகழ்ச்சியின் தில்லுமுள்ளையும் படம் போட்டு காட்டி, கல்லா கட்டுவார்கள். அதையும் நாம் இருகரம் கூப்பி, கைதட்டி வரவேற்க இப்பொழுதே தயாராவோம் !!

Sunday, March 11, 2012

ஆண் பாவம் !!

     "இந்த வீட்ல யாரும் என்ன பத்தி யோசிக்கறதே இல்ல, அண்ணனுக்கு மட்டும் இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம், எனக்கும் சேத்து பொண்ணு பாக்க சொல்லு" - பேரன் !
      டேய், அவன் உன்னவிட ரெண்டு வயசு மூத்தவண்டா - பாட்டி !
      சரி, ரெண்டு வயசு சின்ன பொண்ணா பாத்து எனக்கு கட்டி வைக்கறது - பேரன் !
       உங்கப்பன் உனக்கு பொண்ணு பாக்க மாட்டேங்கறான்னு ஏன்டா கவலபடரே, அதான் நான் இருக்கன்ல என்ன கட்டிக்க  - பாட்டி !
      போற போக்க பாத்தா அதான் நடக்க போகுது - பேரன் !
      அடி செருப்பால, எங்கம்மாவையா கட்டிக்க போற - அப்பா !
      ஏன், நீ மட்டும் எங்கம்மாவ கட்டிக்கலாம், நான் உங்கம்மாவ கட்டிக்ககூடாத ?

                சென்ற வாரம், ஆதித்யா சேனலில், "ஆண் பாவம்" படம் போட்டுருந்தான் .இந்த படத்தை இயக்கும்போது பாண்டியராஜனுக்கு 20  வயதுக்கும் குறைவு என்பதை சத்தியமாக நம்பமுடியாது. இளம் வயது இயக்குனர் என்ற பெருமை படைத்த இயக்குனரின் இந்த படம், இப்போது பார்கும்போதும்கூட வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

                 தனது அண்ணனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் தந்தை, தனக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஏக்கத்தை காட்சிக்கு காட்சி, தனது பேச்சின் மூலம் தந்தைக்கு புரிய வைக்க இவர் படும் பாடு அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.
       தனக்கும் பெண்பார்க்க சொல்லி பாட்டி மூலம் தந்தையிடம் தெரியபடுத்டுவார். அதற்க்கு அப்பவோ,

"இவன ஒரு வினோபா மாதிரி, விவேகானதர் மாதிரி, வள்ளலார் மாதிரி ஆக்க போறேன், ஏன்னா என்ன மாதிரி தைரியசாலி பாரு" என்பார்.
 உடனே பாண்டி அப்பாவிடம், " ஏம்பா உன்கிட்ட நான் தைரியசாலின்னு சொன்னனா "?
அப்ப நீ கோழைன்ரியா ?
ஆமா !
பயந்தான்கோளின்ரியா ??
ஆமா !
அறிவிலைன்றிய ?
ஆமா !
அட தூ உனக்கு எவன்டா பொண்ணு கொடுப்பான் !! பேமானி !!

மேலும் பல இடங்களில் சிரிப்பை தூண்டும் வசனங்கள் !!
சாம்பிள் சில !!

15  காசுக்கு எவன்டா படம் காட்டுவான்? சரி, ரெண்டு ரீல் மட்டும் பாத்துட்டு போ !!

பையன் முழி தான் திருட்டு முழியே தவிர, ஆள் ரொம்ப நல்லவன், இல்லம்மா ??
ஏங்க என்ன பாத்தா திருடன் மாதிரியா தெரியுது ! வீட்ல கட்டு கட்டா பணம் இருக்கும்போது கூட 5  ரூவாக்கு மேல எடுத்ததே கிடையாது !!

டேய் தம்பி, வண்டி ரிவர்ஸ் எடுக்கறேன், பின்னாடி முட்டினா சொல்லு !!
முட்டுச்சா ?
முட்லங்க !!
முட்டுச்சா ?
முட்லங்க !!
முட்டுச்சா ?
முட்ல வாங்க !

இப்ப முட்டிடுச்சு !!


நேரம் கிடைத்தால் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய, எவர் கிரீன் காமெடி கும்மி !!!

 கொசுறு !!

இந்த படத்தில் ரமேஷ் கண்ணா, ஒரு சின்ன காரக்டரில் வந்து போவார். இதில் அவர் உதவி இயக்குனாராக பனி புரிந்திருப்பார். திரை உலகில் ஒருவன் வெற்றி பெற எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். இயக்குனராக இவர் இன்னும் வெற்றி பெறவே இல்லை,
எதிர்பாராமல் நகைச்சுவை நடிகனாக மாறி, சில நாட்கள் கலக்கினார், அவ்வளவே.

Thursday, February 23, 2012

MLAவின் மின்சார தந்திரம் !!

   தனது கணவரின் ரூம் கதவை பல முறை தட்டியபின்னும், உள்ளிருந்து ஒரு அசைவும் வராததால், பதட்டமடைந்த மீனாட்சி, உறங்கிகொண்டிருந்த தனது மகனை எழுப்பி அழைத்து வந்தாள். மகன், சற்றுநேரம் முயற்சித்துபார்துவிட்டு, கதவை உடைக்க முடிவு செய்தான். வேலை ஆட்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே தூக்கில் தொங்கிகொண்டிருந்தார் MLA  ராஜரத்தினம்.
      செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஊரே ஒன்று கூடி அவர் வீட்டு வாசலை முற்றுகை இட்டது ..கடந்த 30 வருஷமா அவர்தான் அந்த ஊரோட MLA, சுயேட்சை MLA  ! எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஊருக்கு அவர் தான் MLA ! ஆனா அவர், ஒரு தடவ கூட ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு போனதே இல்ல. வேட்புமனு தாக்கல் பண்ணிட்டு வீட்டுக்கு போனார்னா, வெற்றி சேதி கேட்ட பிறகுதான் வீட்ட விட்டு வெளிய வருவார். அடுத்த 5 வருஷமும், வீடு வீடா போய், மக்கள் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார். சில ஊர் மக்களுக்கு, அவங்க ஊர் MLA யாருன்னே தெரியாது. ஆனா இந்த MLA க்கு, அந்த ஊர் மக்கள் எல்லாரையும் தெரியும்.  
         அவுருக்கு சொத்துன்னு இருக்கறது, அவரோட வீடும், கொஞ்சம்  நிலமும் தான். சட்டசபை கூடும் நாட்கள் தவிர, மீதி  நாட்கள் எல்லாம், அந்த ஊர விட்டு எங்கயும் போனது கிடையாது. தன்னோட டூ வீலர்லதான், ஊர் முழுக்க வலம் வருவார். கண்ணில் படும் குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு உடனே தீர்க்க வழி காணுவார். அந்த ஊர்ல தண்ணி பிரச்சன கிடையாது, போகுவரத்து பிரச்சன கிடையாது, குண்டும் குழியுமா  ஒரு  ரோட பாக்க முடியாது.
         படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி, சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்தார். ஒரு காலத்தில் கோடீஸ்வர ஜாமீன், இன்றோ அனைத்தையும் பொது மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். வீட்டில் இவருக்கு எல்லாமே  இவரது மனைவிதான். ஒரே மகன் விவசாயம் படித்துவிட்டு, நிலங்களை கவனித்து கொள்கிறான். இப்படி எல்லாமே சிறப்பா அமைந்த இவரோட வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமதான் போய் கிட்டிருந்தது.
        ஆனா, கடந்த ஒரு வருஷாமா இவர பாதித்த ஒரே விஷயம் மின்வெட்டு. தினம் நடக்கும் பத்து மணி நேர மின்வெட்டால் அந்த ஊர் மக்கள் படும் துன்பத்தை இவரால் தாங்க முடியவில்லை. பல சிறு தொழில்கள் நடத்த முடியாம போய் ஒவ்வொன்னா மூடும் நிலையில் இருந்தது. இவர் சிறுவனாக இருந்த பொழுது இவரின் நண்பர்கள் பலர் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்து வந்தனர். ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ அந்த வெளிச்சம் கூட கிட்டாத நிலை. இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சை வேறு வருகிறதென்ற கவலை, இவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.
      இதனால் மிகவும் வருந்தியவருக்கு , ஒரு வாரம் முன்பு இவர் கேள்விப்பட்ட செய்தி, இவரை மிகவும் சிந்திக்க வைத்தது. இரண்டு நாட்களாக, தனிமையில் கிடந்து யோசித்தவர்க்கு, இந்த முடிவுதான்  சரியென பட்டது !!
       வீட்டின் நடு கூடத்தில், கிடத்தியிருந்த இவரின் உடலுக்கு ஊரே ஓன்று கூடி இறுதி அஞ்சலி செலுத்திகொண்டிருந்தது. அருகே, அழுது அழுது சிவந்த கண்களுடன் இவரது மனைவி மீனாட்சி. அந்த கண்களில், அந்த சோகத்தையும் மீறி ஒரு பெருமிதம். மேலே, மின்விசிறி  சுழன்றுகொண்டிருக்க தனது கணவரை பெருமை போங்க பார்த்த மீனாட்சிக்கு, நேற்று தன் கணவர் கூறியது மனதில் ஓடியது..
  "நான் செத்தாதான், இந்த ஊருக்கு கொஞ்ச நாளாவது கரண்ட்டு வரும் மீனாட்சி"

செய்தி: சங்கரன்கோவில் இடைதேர்தலை முன்னிட்டு, அங்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ரகசிய உத்தரவு !!

இதே கதை, வேறு கோணத்தில் !

ஏலே, முருகா, பயங்கரமா வேர்க்குது பார், Fan அ போடுறா ..
ஐய்யா, கரண்ட் இல்ல ஐய்யா.
ஆஹா, கரண்ட் இல்லையா, சரி, அருவாள எடு, நம்ம ஊர் MLAவ போடு.
ஐய்யா ?
போடுராங்கரேன் !!
ஐய்யா, MLAவ, போட்டாச்சு ஐய்யா !!
இப்ப போடுறா, Fan ஸ்விட்ச !
போட்டச்சுயா !!
சுத்துதா ?
சுத்துதுயா !!
Moral of the story : ஒரு ஊருக்கே கரண்ட் வருதுன்னா, ஒரு MLAவ போடறதுல தப்பேஇல்ல !!


கும்பிபாகம் !!

5  நிமிஷம் கரண்ட் கட் பண்ணா தப்பா ?
தப்பேஇல்ல !
அஞ்சு அஞ்சு நிமிஷமா, அம்பத்தஞ்சு நாள் கட் பண்ணா ?
தப்பு மாதிரி தாங்க தெரியுது !
அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம், 5 மணிநேரம்,  555  நாள் கட்பண்ணா ?
ரொம்ப தப்புங்க !!
இதுக்கு கருட புராணத்துல என்ன தண்டன தெரியுமா ? பத்த வைடா அடுப்ப, ஊத்துடா என்னைய, வறுடா இவன !!

அந்த பொன்னும் ஈரோடு தான் !!!


 

செம காமடி பாஸ், "நேத்திக்கு காலைல 6  மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கடைக்கு போய்,டீயும், வடையும், சாப்டுட்டு,பேப்பர் வாங்கிட்டு வந்து, ஒரு பக்கம் விடாம படிச்சேன், அப்பறம் எட்டு
மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு, சரின்னு நானும்
ரூம்மெட்டும் கெளம்பி போய், நல்லா சுட சுட பொங்கலும் பூரியும் 
சாப்டு வந்து, அப்பிடியே, TV  பாத்துட்டே ஊர் நாயம் பேசிட்டு இருந்தோம்..சரியா 11  மணிக்கு மறுபடியும் போய், ஒரு டீ அடிச்சுட்டு வந்தேன்..அப்பறம் அப்பிடியே கொஞ்சநேரம் நெட்ல மேஞ்சிட்டு, 1 மணிக்கு போய் ஆந்திரா மெஸ்ல full கட்டு கட்டினேன்..வீட்டுக்கு வந்து சுகமா ஒரு தூக்கம் போட்டேன்.. சாயங்காலம் எந்திருச்சு மறுபடியும் ஒரு டீ, ரெண்டு போண்டா, அப்பறம் அப்டியே TV  பாத்துட்டு, நைட் 10 மணிக்கு போய் சில பல பரோட்டாவும் சப்பாத்தியும் உள்ள தள்ளினேன்"..

சரி, "அதுக்கு என்னடா இப்ப" ?

"அதான் நேத்து அந்த தின்னு தின்னது, வயத்துக்குள்ள கடமுட கடமுடன்னு ரயில் ஓடற 
மாதிரி இருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்".

இவுருதாங்க, நம்ம நண்பர் "காரி". "வயத்த கலக்குது, இதோ வந்துடறேன்" 
அப்பிடீன்னு அவசரமா சொல்லிட்டு ஓட வேண்டிய நேரத்துல கூட,
இப்படித்தான் ஒன்ற பக்கத்துக்கு பேசுவார்.கேரள பத்பநாப சுவாமி கோயிலின் சில அறை
கதவுகள் பல்லாண்டுகளாக திறக்கவேயில்லைன்னு சொல்றாங்க,
ஆனா இவரோட வாய் கதவுகள் கடந்த 25 வருஷமா மூடினதே கிடையாது..

இவர் பிறந்தது, வளந்தது, படிச்சது, எல்லாம் ஈரோடு, இப்ப வேலை பாக்கறது சென்னைல.நம்மில் சிலருக்கு நாட்டு பற்று இருக்கும், சிலருக்கு மாநில பற்று இருக்கும், சிலருக்கு மொழி பற்று இருக்கும், சிலருக்கு இனப்பற்று இருக்கும். ஆனா நம்ம காரிக்கு ஊர் பற்று ரொம்ப ஜாஸ்தி. இவர பொருத்தவரைக்கும், தமிழ்நாட்லயே, இல்ல இந்த இந்தியாவிலயே, ஏன் இந்த உலகத்துலயே, அணைத்தது ஜீவா ராசிகளும் வசிக்க
சிறந்த ஊர் ஈரோடுதான்.பெட்டிகடைல கடலைபருப்பி 
சாபிடும்போதும் சரி, சரவண பவன்ல தோச சாப்பிடும்போது சரி
பொன்னுசாமில பிரியாணி   சாபிடும்போதும் சரி இவர் என்ன சொல்வார்ணா, "என்னதான் சொல்லுங்க எங்க ஊர்ல வர்ற டேஸ்ட் வேற எங்கயும் வராது"
                       எங்க ஆபீஸ்ல கிட்டத்தட்ட 400  பேர் வேலை செய்றோம். ஒவ்வொருத்தருக்கும் அவங்க டீம்ல கூட வேலை செய்ற 10,20  பேர தெரியும், வெளி டீம்ல ஒரு 10,20  பேர்கூட பழக்கம் இருக்கும். ஆனா இவருக்கு ஆபீஸ்ல வேலை செய்யற 400 பேரையும் தெரியும். டெய்லி வந்து கம்ப்யுடர ஆண் பண்ணிட்டு கிளிம்பினார்ணா, 400  பேர்கிட்டயும்  போய்   அட்டன்டன்ஸ் போட்டுட்டு திரும்ப ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சுதான் சீட்டுக்கு வருவார்.
                     புதுசா யாரவது ஈரோட்டுக்காரர் வேலைக்கு சேர்ந்துட்ட போதும், எல்லார்ட்டயும் போய், "மச்சி, இவர் எங்க ஊர்டா",, "மாப்ள , நம்ம ஊர்காரண்டா" அப்டீன்னு introduce  பண்ணிவைப்பார்,. அது மாதிரி புதுசா சேர்ற பொண்ண இவர் friendship புடிக்கற ஸ்டைலே தனி. நேர அந்த பொண்ணு இருக்கற சீட்டுக்கு பக்கத்து சீட்  ஆள்கிட்டபோய் ஒரு முக்கா மணிநேரம் மொக்க போடுவார், அப்டியே 5 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அந்த பொண்ணுகிட்ட என்ன  Reaction அப்டீன்னு பாப்பார்.
லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டா போதும் அடுத்த ஒருமணி நேரத்துல அந்த பொண்ணோட cafeteriaல காபி சாப்டுகிட்டு இருப்பார்.

                      ஆபீஸ்ல, யார்காவது எந்த பொண்ண பத்தியாவது டீடைல் வேணும்னா இவர்ட்ட தான் கேப்பாங்க. இவரும் கொஞ்ச நேரத்துல விசாரிச்சிட்டு வந்துட்டு, "அவுளுக்கு ஏற்கனேவே வேற ஆள் இருக்கு மச்சி"  அப்டீன்னு சொல்வார் . நெஜமாவே அவுளுக்கு வேற ஆள் இருக்கா, இல்ல இவர்தான் அவங்கள வேற யாரும் கரெக்ட் பண்ணிடகூடாதுன்ற ideala  இப்படி சொல்றாரா அப்டீன்னு ஒரு டவுட் ரொம்ப நாலா எனக்கு இருக்கு.

                     இவர்க்கு எப்ப எது நடந்தாலும் அது காமெடி தான். இவர் எப்ப என்ன பேச வந்தாலும் முதல்ல ஸ்டார்ட் பண்ற வார்த்த, "செம காமெடி மச்சி".
"டேய் மச்சி நேத்து செம காமெடி ஆயிடுச்சி, என்னாச்சு பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடிச்சி, செம காமெடி போ" ..."டேய் இந்த செம காமேடிய கேளேன், பஸ் ஸ்டாப்ல முக்கா மன்நேரமா வெயிட் பண்றேன் பஸ்ஸே வரல, செம காமடி, அப்பறம் 100 ரூவா தெண்டமா ஆட்டோக்கு குடுத்து வந்தேன்" இதுமாதிரி நடக்கற விஷயம் எல்லாம் கூட இவருக்கு காமெடி தான்.
                          ஒரு நாள் எனக்கு இன்சூரன்ஸ் சம்பந்தமா ஒரு டீடைல் தேவபட்டுது. சரி, இருக்கவே இருக்கார்  நம்ம காரி, அப்படீன்னு அவர்ட்ட  போய் அந்த விஷயத்த சொன்னேன்.
"பாஸ், இதென்ன பாஸ் சப்ப மேட்டரு, Just Dial  கூப்புட்டு கேட்டா சொல்லிட போறாங்க"
                "oh , சரிடா மச்சி நான் கேட்டுக்கரேன்னு சொல்லிட்டு" phone பண்ண மொபைல் எடுத்தேன். "பாஸ் phone குடுங்க நான் கேட்டு சொல்றேன்" அப்டின்னு சொல்லி என்கிடேந்து மொபைல புடுங்கி டயல் பண்ணினார். அப்டியே பேசிட்டே  நாங்க இருந்த இடத்த விட்டு தள்ளி போய்ட்டார்.
                  ஒரு 25  நிமிஷம் கழிச்சு "பாஸ், செம காமெடி பாஸ்" அப்படீன்னு கத்திகிட்ட ஓடி வந்தார்.
                      "மச்சி எதுவா இருந்தாலும் பதட்ட படாம அமைதியா சொல்லு "  என்றேன்.
               "பாஸ், நீங்க வேற, phone  பண்ணினனா, ஒரு பொண்ணு எடுத்துச்சி பாஸ், செம காமெடி போங்க"
                  "இதுல என்னடா காமெடி, இன்சூரன்ஸ் பத்தி என்ன சொன்னங்க"
              "பாஸ், அதெல்லாம் விடுங்க, இந்த காமடிய கேளுங்க"
             " என்னடா " ?
                "அந்த பொன்னும் ஈரோடு தான்,பாஸ் " !!!

Saturday, February 4, 2012

பிரியாணி, அன்லிமிடட் தான ??

                "யாகவராயினும் நாகாக்க"  என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, அவமானபடுத்தும் விதமாகவோ கடும்சொர்களை பயன்படுத்தகூடாது என்கிறான் வள்ளுவன்.
                என்னை பொறுத்தவரை நாவடக்கம் என்பது பேசும்போது மட்டுமல்ல சாப்பிடும்போதும் தேவை . ஆம், எப்பவுமே நம் வயிற்றுக்கு என்ன தேவையோ அதை சாப்பிட வேண்டுமே தவிர, நாவிற்கு தேவையானதை சாப்பிட கூடாது. சரியான அளவில், சரியான நேரத்தில், சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தால் என்றுமே ஆரோக்யத்துடனும், இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக பெற முடியும்.
                  சுத்தி வளைச்சது போதும், நான் நேரா விஷயத்துக்கு வரேன், நம்ம பிரெண்ட் "சொக்கு" இருக்கானே, சரியான சாப்பாட்டு ராமன். எப்ப, எந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும், இவன் கேட்கும் மொத கேள்வி, "மீல்ஸ் லிமிட்டா, அன்லிமிட்டா" ? சர்வர், "லிமிடட் மீல்ஸ் தான் சார்" என்று சொன்னால்  உடனே வரும் அடுத்த கேள்வி, "எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ" ?. அட ஏங்க, ஒரு தடவ தலப்பாக்கட்டு போயிட்டு அங்கயும்," ஏம்பா, பிரயாணி அன்லிமிட்டெட் தான" என்று கேட்டு வைத்தான். சர்வர் கடுப்புடன் முறைக்க இவன் சங்கடமேபடாம நம்மை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
              சில ஐடம் டேஸ்ட் நல்லா இருந்துட்டா, அதையே ரெண்டு தடவ ஆர்டர் பண்ணி சாப்பிடுவான், காலை வேலையில் ரெண்டு பொங்கல், ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு, சர்வர் "பில் கொன்டுவரட்டுமா" என்று  கேட்கும் போது, வயற்றை தடவிக்கொண்டே ஏதோ டயட்டில் இருப்பவன் போல், ஒரே ஒரு தோசை என்று சொல்லி, சர்வர் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை ரசிப்பான்.
        ஒரு நாள் இவனிடம்  எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்தோம். வேலைக்கு மத்தியில், மச்சி ஒரு டீ, சாப்பிடலாமா? என்றான். 
          மணி மூன்ற தாண்டா ஆகுது, இப்பதாண்டா சாப்டோம் அதுக்குள்ளே ஏன்டா?
         இல்ல மச்சி, "மதியம் சாப்பிட்டது சரியாய் செரிக்கள, அதான்"..
         சரி என்று அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, ரெண்டு டீ என்று நான் சொல்ல, மச்சி எனக்கு காபி என்றான். சரி, ஒரு டீ ஒரு காபி என்று சொல்ல வந்தால்,   மச்சி "இங்கே வேண்டாம், அதோ அங்க போனா, நல்ல பில்ட்டர் காபி சாப்பிடலாம்" என்று எதிரில் இருந்த உயர்தர சைவ ஹோட்டலை காட்டினான். ஆஹா, பத்து ரூவாய்ள, முடிச்சிடலாம்னு பார்த்தா அங்க காபி 20  30  ரூவா சொல்வானே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சரி என்றேன்.
                 கடைக்குள் போனதும், மச்சி, "காபிக்கு முன்னாடி ஒரு பஜ்ஜி" என்று சொல்லிவிட்டு என் தலையசைபிற்கு காத்திராமல், அவனே ஒரு ப்ளேட் பஜ்ஜி ஒரு ப்ளேட் போண்டா என்று ஆர்டர் செய்துவிட்டு என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான். மனதில் கருவிக்கொண்டே நானும் காத்திருக்க சர்வர் வந்து நீட்டிய ப்ளேட்டில் திருப்பதி லட்டு சைசில் 4 போண்டா , கல்லு கட்டி வளர்த்த பொடலங்கா சைசில் 4  பஜ்ஜி. அதிர்ச்சியடைந்த நான், "ஏம்பா ஒரு ப்லேட்டுணா 2 தானே" என்று கேட்க, "இல்ல சார் இங்க நாளுதான் வரும்" என்றான். (புது டெக்னிக்கா இருக்கே ? உக்காந்து யோசிப்பாங்களோ).. "ஏன்டா, எதாவது ஒன்ன கான்செல் பண்ணிடலாமா" என்றால் சொக்குவோ, "இருக்கட்டும் மச்சி சாப்டரலாம்" என்று அதே  அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
       " இவ்ளோ பெருசா? எப்டி போட்டுருப்பாங்க !!"  என்று நினைத்துகொண்டே நான் கஷ்டப்பட்டு ஒரு பஜ்ஜியையும் ஒரு போண்டாவையும் சாப்டு முடிக்கறதுக்குள்ள, சொக்கு, மிச்சம் இருந்த 3  பஜ்ஜி, 3  போண்டாவா உள்ள தள்ளிட்டு, "தம்பி, காபி இன்னும் வரல" என்று சர்வரிடம் கடுகடுத்தான்..
                    எப்பவும், யார்கூட சாப்ட போனாலும், முடியும் நேரத்தில், "வேற எதாவது வேணுமா" என்று கேட்கும் நான், இவனிடம் அது மாதிரி கேட்டு பல தடவ அனுபவபட்டிருப்பதால், அவன் காபி உருஞ்சும் போதே சர்வரிடம் பில் என்று சிக்னல் செய்தேன். வந்த பில்லோ 175  ரூவாய், நான் அதிர்ச்சியில் சொக்குவ  முறைக்க அவன் முகத்தில் அதே அசட்டு சிரிப்பு. சரி, தலைவிதியேன்னு    பர்சை திறந்தாள், அதில்  இருந்தது வெறும் 90  ரூவாய். அட பாவி, "போன மாசம் வீட்டுக்கு FRIDGE  வாங்கும்போது கூட புல்லா cash  கொடுத்து தாண்டா வாங்கினேன், கேவலம் ஒரு காபிக்கு போய் கார்டு தேக்க வச்சிட்டியேடா"  என்று கத்திகொண்டே செட்டில் செய்தேன். 

      வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்யும்போது, "ஏன்டா நாயே, இவ்ளோ திங்கரியே, உனக்கெல்லாம் பேதியே போகாதா" ? என்றேன்.
      "இல்ல மச்சி, தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா நோயும் வந்து போயிருக்கு மச்சி, ஆனா பேதி மட்டும் எனக்கு போனதே இல்லடா" என்றான் பெருமையாக.  
     நிஜமாவாடா ? ...
     நிசமா மச்சி.

"நாளைக்கு போகும், சத்தியமா போகுண்டா" ....... 

Monday, January 30, 2012

Figure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..

              அது ஒரு பொழுது போகாத(!) திங்கட்கிழமை காலை நேரம். ஜனவரி மாத பனிபொழிவு மூக்கை பதம் பார்க்க, உச்சி முதல் நெஞ்சு வரை சளித்தொல்லை..புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக, மனதில் தோன்றிய சிந்தனைகள் பல. அனைத்துமே ஒன்றுக்கும் உதவாத உருப்படாத சிந்தனைகள். எண்ணங்கள் கடிவாளம் போடாத குதிரை போல் அங்கும் இங்கும் அலைய, ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் வந்து நின்றது அந்த சிந்தனை. அது "Figure "
                     பொதுவாக நாம் பெண்களையே Figure  என்று குறிப்பிடுகிறோம். இந்த சொல் எப்போது, எப்படி பெண்களை குறிப்பிட ஆரம்பித்தது என்று அறிய, வரலாறை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். அதற்க்கு நமக்கு நேரம் இல்லை. அதனால் இதன் உண்மையான பொருள் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒண்ணுமே மண்டைக்கு எட்டல.. சரி, இருக்கவே இருக்கு நம்ம Google . சமீபத்தில்தான்  நண்பன் பார்த்த எபக்டில், "What is the definition of Figure" என்று type  செய்ய, Google  துப்பியது இது..
   "Figure is a written or printed symbol representing something other than a letter, especially a number".
    ஆக figure  என்பது ஒரு "என்" அல்லது ஒரு "வரைவு". சரி, பிறகு அது ஏன் பெண்களை குறிக்க பயன்படுத்த பட வேண்டும்? இது நேரடியாக தமிழ்நாட்டில் தோன்றியதா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இங்கு இறக்குமதி ஆனதா ? தமிழை தவிர வேறு மொழியில் இவ்வாறு பயன்படுத்தபடுகிறதா?
    ஆராம்பதில் வெறும் இளைஞர்களிடம் மட்டுமே இருந்த இச்சொல் பயன்பாடு தற்போது 6  முதல் 60  வயது வரை அனைவரும் பயன்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர் பழக்க தோஷத்தில், "எனக்கு இரண்டு figure  இருக்கு, மூத்த figure  +2  படிக்குது, ரெண்டாவது figure  10th  படிக்குது" என்று மனைவி முன்னிலையில் சொல்ல, மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, நண்பர் திரு திரு...
   சரி கடைசியா விசயத்துக்கு வருவோம். ஏன் இந்த figure  ஆராய்ச்சி, என்பதற்கு அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த சம்பவமே காரணம்.
    நான் வேலை செய்வது ஒரு accounts  நிறுவனம். எங்கள் மேலதிகாரி எங்களிடம் நீண்ட நாட்களாகவே ஒரு DATA  கேட்டு வந்தார். அதை கொடுப்பதற்கு உடல் உழைப்போடு கொஞ்சம் யோசித்தும் எடுக்க வேண்டி இருந்தததால், நாங்கள் தராமல் இழுத்தடிதுகொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று எங்கள் இருப்பிடத்திற்கு வந்த அதிகாரி கோவத்தில், "I Need that Figure immediately"என்று சத்தமாக 40  பேர் முன்னிலையில் கத்திவிட்டார். அந்த நேரம் பார்த்து அவர் நின்ற எடத்தை ஒருபெண் கிராஸ் செய்ய, அலுவலகமே வேடிசிரிப்பில்  மூழ்கியது. கிட்டத்தட்ட 60  நொடிகள் நீண்ட வெடிசிரிப்பு மெல்ல அடங்கவும் அங்கு ஒரு மயான அமைதி. ஆனால் ஒருவன் மட்டும் friends  பட விஜய் கணக்கா சிரிப்பை அடக்கமுடியாம சிரித்துக்கொண்டே இருந்தான்.கடுப்பிலும், தர்மசங்கடத்திலும் மாட்டிகொண்ட அதிகாரி, "ஏண்டா நான் சரியாதானே பேசினேன்" என்று கேட்க கூட முடியாமல், திரு திருவென முலித்துகொண்டே  அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.  
     அது நடந்து பல நாட்கள் ஆகியும், இன்றும் அந்த அதிகாரி எங்கள் பகுதியை கடக்க நேர்ந்தால், "ஏம்பா, அவுருக்கு அந்த Figura  அனுப்பிசிட்டியா" ?  என்று ஒரு குரல் எங்கிருந்தாவது ஒலிக்கும்.