Sunday, May 27, 2012

உறுமி - தெளியவைக்கும்

         உறுமி படத்தின் பாடல்கள் வெளி வந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து மிக நிதானமாக இந்த வாரம் படம் வெளிவந்திருக்கிறது.  இப்படத்தின் பாடல்களை அப்போதே கேட்டு, மிகவும்  பிடித்திவிட, கண்டிப்பாக இதை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.
          இந்த வாரம் திடீரென்று எந்த விளம்பரமும் இல்லாமல்  ரிலீஸ்    ஆகிவிட , நேற்று இஷ்டம் படம் போகலாம் என்று அதன் விமர்சனங்களை படிக்க நெட்டை நோண்டினேன். அப்போத்துதான் தெரிந்தது இது வெளியான விஷயம். இஷ்டம் விமரசனங்களும் ரசிக்கும்படி இல்லாததால் கமலாவில் இதை புக் செய்தேன்.  சனிநீரடு என்று ஔவையாரே சொல்லியுள்ள காரணத்தினால், படத்திற்கு செல்வதற்கு முன் அருகில் உள்ள பாரில் சிறிது நீராடிவிட்டு செல்ல முடிவெடுத்தோம்.
        பாதி மப்பில் இருக்கும்போதுதான்  ஞாபகம் வந்தது, ஆஹா தண்ணியடிச்சுட்டு போன உள்ள விடமாட்டங்கலே என்பது. சரி சமாளிப்போம் என்று முழுதாக நீராடிவிட்டு கிளம்பினோம். 

 வாசலில் செக்யூரிட்டி செக் செய்யும்போது வாசம் வராமலிருக்க வாயை அனுமார் மாதிரி நல்லா இருக்க மூடிகொண்டிருக்க, அங்கே கடந்துபோன சிறுவன் ஐ கொரங்கு பொம்மை என்று சொன்னது என்னைத்தான் என்பது அந்த மப்பிலும் தெளிவாக புரிந்தது.

 ஒருவழியாக செக்யூரிட்டி இடம்  தப்பித்து உள்ளே போய் அமர்ந்தோம்.திரையில் சிலபல விளம்பரங்களுக்கு பிறகு படம் ஆரம்பித்தது.

பிரபுவும் ப்ரித்வியும் ஏதோ ஒரு பாடலுக்கு ஆடிகொண்டிறக்க, யாரோ ஒருவர்  அவரிடம், அவரது மூதாதையர் நிலத்தை ஒரு MNC  கம்பனிக்காக வாங்க வருகிறார்கள். ப்ரித்வியும் நிலத்தை விற்க ஒத்துக்கொண்டு அங்கு இருக்கும் ஆட்களை காலிசெய்ய வைக்க ஊருக்கு கிளம்புகிறார்.

ஊரில் அங்கு வசிக்கும் ஆதிவாசி கூட்டத்தை(?) சார்ந்த ஆர்யா , ப்ரித்வியின் முன்னோர் பெருமையை சொல்ல ஆரம்பிக்கிறார். கத 15  ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அதுக்கப்பரும்  ஒரு  20  நிமிஷம் ஒரு எழவும் புரியல. ஒருவேள மப்புல இருந்ததால் எனக்கு மட்டும் தான் புரியலையா ? இல்ல உங்களுக்கும் புரியலையா ? படிக்கறவங்க கமெண்ட் போடுங்க ப்ளீஸ் !!ஆனா ஒன்னு அடிச்ச மப்பு புல்லா தேளிஞ்சிடுச்சு..

அப்பறம் ஒருவழியா, வாஸ்கோடகாமா, சிராக்கள் அரசன் .. நாட்ட ஆள வந்தான்  .. ப்ரித்வியோட அப்பாவ  கொன்னான் .. அவன ப்ரித்வி பழி வாங்கினான் .. அதனால் யாரும் நிலத்த வெள்ளைகாரனுக்கு விக்காதீங்க , குறிப்பா MNC  காரனுக்கு விக்காதீங்க.. அப்டீன்னு  படம் முடியுது ..

 படத்தின் ஆறுதல்கள் சில ..

ஒளிபதிவு .. ஆஹா அருமை .. கண்ணுக்கு நல்ல விருந்து...
ஹீரோயின்கள்  இருவரும் கொள்ளை அழகு.. குறிப்பாக நித்யா மேனன் ...
பிரபுதேவா .. ரொம்பவே பொறுமையை சோதிக்கும் திரைக்கதைக்கு .. இவர் ஆங்காங்கே, கொஞ்சமே கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி ...ரசிக்க வைக்கிறார்..

எப்படா படம் முடியும் என்று காத்திருந்து.. விட்டவுடன் எழுந்து ஓடி வந்தேன். வாசலில் அதே செக்யூரிட்டி..ச்ச, போகும் போதே இவன் ஒழுங்கா, நான் மப்புல இருக்கறதா கண்டுபுடிச்சு " சாரி சார், ட்ரிங்க்ஸ் சாப்டு இருந்தா உள்ளே விடமுடியாது " அப்டீன்னுசொல்லிருந்தா .. இப்படி அவஸ்தபடிருக்க வேண்டாமே என்று நொந்துகொண்டே  ... பைக்கை ஸ்டார்ட் செய்தேன்..

1 comment:

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete