Saturday, November 3, 2012

விளம்பரங்களின் வில்லத்தனம் !

           அடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..
           டேய், தில்லான மோகனாம்பாள்  படம் பாத்துருக்கயா ?
           இல்ல ..
          சிவாஜியையும் பத்மினியையும்நேர்ல பாத்துருக்கயா ?
          இல்ல
         அப்பறம் எத வச்சிடா இந்த மூஞ்சி சிவாஜி, அந்த மூஞ்சி பத்மினின்னு சொன்ன ? சொல்றா ..
           இவருதான் சொல்ல சொன்னாரு, ஆட்டம் நடக்குற ஊருக்கெல்லாம் வா, பத்து பத்து ரூவா தரேன், இந்த மாதிரி புகழ்ந்து பேசு, அதுவும் அந்த தவுளுகாரன் காதுல விழறமாதிரி சொல்லு ..
           நீ போ.. டேய், ஏன் உனக்கு இந்த வேலை- நீ வாங்கற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா ?
"ஒரு விளம்பரம்ம்ம்"

            இப்ப நான் சொல்ல வர்றதும் விளம்பரங்கள் பத்தி தாங்க.நமது தொலைக்காட்சி விளம்பரங்கள் எந்தளவுக்கு மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது, இல்லாத சில விசயத்த இருப்பதாக சொல்லி தொடர்ந்து நமது பர்சை பதம் பார்துகொண்டிருக்கிறது. ஒரு பொய்யை தொடர்ந்து பல முறை சொன்னா அதை உண்மை என்று மக்கள் நம்ப தொடங்கிவிடுவார்கள் என்பதை இந்த விளம்பர உலகம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கு.
        
           எங்க சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி நோடென்சன்னு சொல்றான் ஒருத்தன்,..டேய் ஏன்டா, ஏன் ? அப்ப மத்த சோப்பு போட்ரவங்கல்லாம் கையாள கக்கத்த சொறிஞ்சிட்டே திரியிரான்களா..ஆனா ஒன்னுடா, கடசிவரைக்கும் அந்த பத்து ஸ்கின் ப்ராப்ளம் என்னன்னு நீங்க சொல்லவே இல்லடா.



          இந்த அழகு சாதனா பொருள் விக்கறவன் இம்சைதான் இருக்கறதுலயே பேரிம்ச.இவங்க பொருள யூஸ் பண்ணா ஒரே வாரத்துல சிவப்பாயிடலாமாம் .இத நம்பி, நம்ப ஊர் மக்களெல்லாம் அத வாங்கி மூஞ்சி புல்லா பூசிகிட்டு கருப்புமில்லாம சிகப்புமாகாம ஒரு வித்தியாசமான ஜந்து மாதிரி மூஞ்சில்லாம் சொறி வந்து திரிஞ்சிக்கிட்டுருக்காங்க."சிகப்பு என்பது அழகல்ல, நிறம்" என்று இவர்களுக்கு யார்தான் புரிய வைப்பது..


          இப்ப புது டிரென்ட் என்னன்னா, நம்ம மெடிகல் அசோசியேசன் கிட்ட அங்கீகாரம் வாங்கிக்கறது. அப்பறம் மருத்துவ ரீதியா இது உடம்புக்கு நல்லது அப்டீன்னு சொல்றது. நம்மூர்ல அறிவுரைக்கு அப்பறம் ஈசியா கிடக்கறது என்ன அப்டீன்னு கேட்டீங்கன்னா, இந்த மெடிகல் அசோசியேசன் அங்கீகாரம் தான். அஞ்சோ பத்தோ கொடுத்தா நம்ம டாஸ்மார்க்ள விக்கற சரக்கு கூட லிவருக்கு நல்லதுன்னு சர்டிபிகேட் கொடுப்பாங்க.

          எனக்கு தெரிஞ்சு இந்த வேலைய முதல்ல ஆரம்பிச்சது ஹார்லிக்ஸ் தான். "டாக்டர்கள் சிபாரிசு செய்வது" அப்டீன்னு சொல்லி விறபனைய உயர்திக்கிடாங்க. ஆனா அந்த டாக்டர போய் கேட்டா, "நோ, நோ, நான் சிபாரிசு செய்யவே இல்லையேன்னு" சொல்றாரு..

        இத பாத்துட்டு காம்ப்லான்காரன்  சொல்றான் இத குடிச்சீங்கன்ன சீக்கரம் உயரம் ஆவீங்கன்னு.. எங்க மம்மியும் எனக்கு சின்ன வயசுல காம்ப்ளான் தான் குடுத்தாங்க, ஆனா நான் அஞ்சடிக்கு மேல வளரவே இல்லையே. எதுக்கும் இப்ப நாலு பாட்டில் வாங்கி ட்ரை பண்ணி பாத்துடனும்..

          ஒரு டூத்பேஸ்ட் கம்பனிகாரன், நிஜமாவே சில டென்டிஸ்ட்கள கவர் பண்ணி, தன்னிடம் வரும் பல் நோயாளிகளை அவங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ண சிபாரிசு செய்ய வச்சிருக்கான். என் நண்பர் கூட அத நம்பி சில நாள் அந்த பேஸ்ட் யூஸ் பண்ணிட்டிருந்தார்.. மத்த டூத்பேஸ்ட்லாம் பத்து ரூவான்னா இவன் மட்டும் அம்பது ரூவாக்கு வித்துட்டிருந்தான் என்பது தான் இதில் கொடுமையான விஷயம்.

        மேல சொன்னது ஒரு சேம்பிள் தான். மொத்த விளம்பரத்தையும் பத்தி சொல்லனும்னா ஒரு மெகா சீரியலே எடுக்கணும். இது போன்ற போலியான விளம்பரங்களை தடுக்க நமது அரசு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது வேதனை..நாம் தான் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழுப்புடன் இருக்க வேண்டும்.

பின்குறிப்பு : இத்தளத்தில் உங்கள் விளம்பரங்களை இடம்பெற செய்ய அணுகவேண்டிய முகவரி ட்ரிபில்டபில்யு அட் ஈமெயில் டாட் காம். (www@email.com)