Saturday, July 7, 2012

நான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் !

                  மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடும் படங்கள் பல.எஸ்.எஸ்.ராஜமெளலி தெலுங்கில் மாஸ் இயக்குனர், இது வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் அங்கு மெகா ஹிட். அதில் நான் பார்த்தது மகதீரா, மரியாதை ராமண்ணா மட்டுமே. மொழியே புரியாமல் பார்த்தும், இரண்டுமே என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே  ராஜமெளலியின் தீவர விசிறியாகிவிட்டேன்.
                  நான் ஈ ட்ரைலர் பார்த்ததுமே என்னை மிரள வைத்தது. ட்ரைலர் ரிலீஸ் ஆனா நாளிலிருந்தே, ஒவ்வொரு வெள்ளியும் இந்த வாரம் ரிலீஸ் ஆயிடுச்சா என்று பார்த்துகொண்டிருந்தேன், மிக நீண்ட காத்திருப்புக்குப்பின் அந்த நாள் நேற்று வந்தது.           கதை என்ன என்று ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் தெரியும்.  தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன்.காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை.
                பல முறை பார்த்து புளித்துபோன சாதாரண பழி வாங்கும் கதை தான்.  ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நம்மை கட்டிபோட்டு கலக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுவதும் சீட்டின் நுனியில் அமர்ந்தே படத்தை ரசித்தேன்.
             இது போன்ற காதல் மையமாக உள்ள படங்களில், காதலில் ஆழம் மிக முக்கியம். ஹீரோ ஹீரோயின் இருவருக்குமிடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கு நேரம் ஒதுக்க இயக்குனருக்கு கிடைத்து கிட்டத்தட்ட 15  நிமிடங்கள் மட்டுமே. படம் ஆரம்பித்த அரை மணிக்குள் ஹீரோ வில்லனால் கொல்லபடுகிறார். கிடைத்த 15  நிமிடத்தில் இவர்களின் காதலை முடிந்தவரை அழுத்தமாக சொல்லியிருக்கிறார், குறிப்பாக கண்களிலே சொல்லும் சமந்தாவின் காதல் அழகு.
                   ஒரு சாதாரண  ஈ , மனிதனை அதிகபட்சம் எந்தளவுக்கு இம்சிக்க முடியும் ? காதுகளில் வந்து ரீங்காரம் மட்டுமே இசைக்க முடியும். படத்தில் பல இடங்களில் மிகபெரிய லாஜிக் ஓட்டைக்கு வாய்பிருந்தும் , முடிந்தளவு அனைத்து காட்சிகளிலும் லாஜிக்காக நம்ப வைத்திருக்கிறார், என்னை பொறுத்தவரை லாஜிக் ஓட்டை இல்லாமல் கமர்சியல் படங்களில் வந்ததில்லை. லாஜிக் மீறல்களை தாண்டி நம்மை கட்டிபோடும் படங்களே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தில் லாஜிக் மீறல் காட்சிகளில் கூட கைதட்டல் பெரும் அளவுக்கு திரைகதையை செதுக்கியிருக்கிறார்.
                          படத்தின் நிஜ ஹீரோ "கிராபிக்ஸ்", "பின்னணி இசை", "வில்லன்", மற்றும் "சமந்தா".  எந்திரன் கிராபிக்ஸ் ஏற்படுத்தாத பாதிப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியின் பின்னணி இசை அருமை. வில்லன் நடிப்பு அட்டகாசம், பேசும்போது மட்டும் நாம் டப்பிங் படம் பார்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது, சமந்தாவும் அழகாக வந்து  அழகான முக பாவனைகளில் நம்மை கவர்கிறார். கார்கியின் வரிகளில் இரு பாடல்கள் நலம். வசனம் கிரேசி மோகன், ஓரிரு இடங்களை தவிர, அவரின் வழக்கமான சாயல் இல்லாமல் சிறப்பாகவே இருக்கிறது. 

            பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!


2 comments:

 1. பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!


  Nice....

  Aadi :)

  aadimasam@gmail.com

  ReplyDelete
 2. படத்தின் நிஜ ஹீரோ "கிராபிக்ஸ்" - முற்றிலும் உண்மை... :))

  நல்ல விமர்சனம்...கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete