Sunday, December 2, 2012

ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு

                  சந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம -  அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாம  ஒரு முழு நீல வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் இந்த காலத்தில் தரமுடியுமா ?
              
                முடியும் என்று அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்"   இயக்குனர் பாலாஜி தரநீதரன்.




                       ஹீரோ பேருதாங்க "விஜய்" சேதுபதி - ஆனா நல்லா நடிக்கறாரு - இவருக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் - ப்ரெண்ட்ஸ் கூட சேந்து சும்மா இல்லாம இல்லாம கிரிக்கட் விளையாட போறாங்க..அப்ப என்னாச்சின்னா பால் பிடிக்க போய் தடுக்கி விழுந்த ஹீரோ மண்டைல அடிபட்டு கடந்த ஒரு வருசமா நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்து போய்டுது. தன்னோட கல்யாணத்தையும் .சேத்து .

                எப்டி நண்பர்கள் குழு இவருக்கு வீட்ல யாருக்கும் இப்டி நடந்ததத சொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கறாங்க - இதான் கதை.


             கத்தி மேல் நடக்கும் திரைகதை - கொஞ்சம்  பிசகினாலும் ஒரு உலக தரம் வாய்ந்த மொக்கை படமாக அமைந்த்துவிடகூடிய சாத்தியகூறுகள் ஏராளம். ஆனாலும் தனது இயல்பான திரைகதையினால் இயக்குனர் அசத்தியிருக்கிறார்.. விஜய் மறதி காரணமா பல வசனங்கள திரும்ப திரும்ப பேச வேண்டிய அவசியம்.ஒவ்வொரு முறையும் அவர் அதே வசனத்த பேசும்போது சிரிப்பலை கூடிகொண்டே போவதே இதற்கு சாட்சி..

               படத்தில் இவருக்கு நண்பர்களாக வரும் "பக்ஸ்", "பஜ்ஜி" மற்றும் "சரஸ்" - இவர்கள் தான் தூண்..இந்த ஞாபகி மறதி பேசன்ட்ட வச்சிட்டு அவங்க அடிக்கற லூட்டிதான் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை "நான்- ஸ்டாப்"  கலக்கல் காமடி . இதில் நடிப்பில் கலக்கிஇருக்கும் பஜ்ஜி மற்றும் பக்ஸ் இனி நிறைய படத்துல பாக்கலாம்.


             படத்தின் ஹைலைட் - வசனம் - இயல்பான நடிப்பு - குறிப்பா அந்த கல்யாண மண்டப காட்ச்சியில் - நாளைக்கு தாலி கட்டபோகும் மனைவிய பாத்துட்டு நண்பரிடம் "ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு" என்று கேக்கும் இடத்தில் தியேட்டரே அலறுது...

           பின்னணி இசையும் - ஒளிபதிவும் - படத்துக்கு தேவையானவற்றை நிறைவா கொடுத்திருக்கு.கதைக்கு தேவையில்லாததால் பாடல் இல்லாதது ப்ளஸ்..

          ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பை தந்தாலும் - இது மாறி ஒரு காமடி படம் மீண்டும் வர பல நாட்கள் .காத்திருக்கணும் ..அதனால் மிஸ் பண்ணாம பாருங்க..



No comments:

Post a Comment