Sunday, October 21, 2012

பீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம் !

                  தாண்டவம், மாற்றான் என்று தொடர்ந்து வந்த மாஸ் படங்கள் சொதப்பிகொண்டிருக்க, அமைதியாய் வந்து அழகாய் அசத்தியுள்ளது பீட்சா. திரு குமரன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி  கலக்கல் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் பீட்சா.

               கொட்டும் மழையில் நனைந்துகொண்டே பீட்சா சாப்டா எப்டி இருக்கும்னு தெரியாது - ஆனா இந்த பீட்சா பாக்க கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே செல்லலாம்..ஷார்ட் பிலிம் புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பற்றி நான் சொல்வதை விட - யு ட்யுபில் நீங்களே போய் இவரது படங்களை பார்த்துகொள்ளுங்கள்.

            படத்தோட கதை என்னன்னா -"கத சரியானு மொக்க கதைங்க ஆனா நான் சொன்ன விதம் அப்டி" அப்டின்னு டைரக்டரே தில்லா சொல்லிடறாரு !    சொன்னாதோட மட்டுமில்லாம  அசத்தலான திரைகதை மூலம் அத நிரூபிச்சும் இருக்கார்.

          அதனால நாமளும் இங்க கதைய சொல்லாம விட்டுட்வோம்னு பாத்தா, கத சொல்லாம எப்டி விமர்சனம் எழுதறது.. அதனால் கதையின் சஸ்பன்ச போட்டுஉடைக்காம மேலோட்டமா கொஞ்சம் சொல்லலாம். படத்தோட ஹீரோ ஒரு சாதாரண பிஸ்ஸா சப்ளையர். அவரு ஹீரோயின் கூட ஒரு லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்றார். ரொம்ப கேர்புல்லா இருந்தும் கூட அவன் யூஸ் பண்ண காண்டம்ல இருந்த சின்ன ஓட்டல லீக்காயி ஹீரோயின் வயத்துல சைக்ளோன் பார்ம்  ஆயிடுது ..அதாங்க பேபி பார்ம்  ஆயிடுது..கல்யாணம் பண்ணிகறாங்க ..
       
             இதுக்கு இடையில ஒருநாள் பீட்சா டெலிவரி பண்ண போன வீட்ல ஹீரோ தனியா மாட்டிக்கறார்.. அங்க அடுத்தடுத்து கொலை விழுது..இதுக்கு மேல கத சொன்னா, டைரக்டர் என்ன ஓரு தனி பூத் பங்களால போட்டு அடைத்துவிடும் அபாயம் இருப்பதால் இதோட நிறுத்திக்குவோம் ..

          படத்தில் ஆரம்ப சில நிமடங்கள் கதாபாத்திரங்களை பற்றி கூற எடுத்துக்கொள்ளும் இயக்குனர், கிட்டத்தட்ட இருவதாவது நிமிடத்திலிருந்து கதைக்கு வர்றார் ..அதிலிருந்து படம் அதகளம் தான்..ஒரே இடத்தில் ஹீரோவை வைத்துகொண்டு அவர் ஆடியிருக்கும் த்ரில்லர் ஆட்டம் செம ..குறிப்பா அந்த நாப்பது நிமிட காட்சியில் ஒளிபதிவு  ஒலிபதிவு ஹீரோவின் அசத்தலான நடிப்பு நம்மை கட்டிபோடுகிறது ..

        பொதுவாக த்ரில்லர் படங்களை அமைதியாக பார்க்கும் நாம், அந்த நாற்பது நிமிட காட்சியில் கைதட்டவும்,ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்..அதுவும் இதுபோன்ற த்ரில்லர் படங்கள் என்னதான் சிறப்பாக இருந்தாலும் ரிபீட் ஆடியன்ஸ் வரவைப்பது கடினம்..இதில் பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளதால் ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என நம்புவோம்.

        அந்த பிட்சா ஒவ்வொருதுண்டாக காணமல் போகும் போது கைதட்டலில் திரையரங்கு அலறுகிறது..பைப் மூடியபின்னும் சொட்டும் தண்ணீர், ஸ்விட்ச் ஆப் செய்தும் சுற்றும் மின்விசிறி போன்ற ட்ரேட் மார்க் த்ரில்லர் பட காட்சிகள் இல்லாதது மேலும் சிறப்பு ..

       படத்தில் இரண்டு மிகபெரிய லாஜிக் ஓட்டைகள்..திரைகதையின்  சிறப்பால் இதை மறந்துவிடலாம். சென்னையில் மிக குறைந்த திரை அரங்குகளில் ரிலீசாகியிரும் பிட்சா, ஓரிரு நாட்களில் மாற்றான் காட்சிகளை அபகரிக்கும் என நம்பலாம்.

பைனல் பன்ச் : பிட்சா - தீவாளி வரை வெடிக்கபோகும் பட்டாசு ..