Monday, January 30, 2012

Figure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..

              அது ஒரு பொழுது போகாத(!) திங்கட்கிழமை காலை நேரம். ஜனவரி மாத பனிபொழிவு மூக்கை பதம் பார்க்க, உச்சி முதல் நெஞ்சு வரை சளித்தொல்லை..புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக, மனதில் தோன்றிய சிந்தனைகள் பல. அனைத்துமே ஒன்றுக்கும் உதவாத உருப்படாத சிந்தனைகள். எண்ணங்கள் கடிவாளம் போடாத குதிரை போல் அங்கும் இங்கும் அலைய, ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் வந்து நின்றது அந்த சிந்தனை. அது "Figure "
                     பொதுவாக நாம் பெண்களையே Figure  என்று குறிப்பிடுகிறோம். இந்த சொல் எப்போது, எப்படி பெண்களை குறிப்பிட ஆரம்பித்தது என்று அறிய, வரலாறை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். அதற்க்கு நமக்கு நேரம் இல்லை. அதனால் இதன் உண்மையான பொருள் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒண்ணுமே மண்டைக்கு எட்டல.. சரி, இருக்கவே இருக்கு நம்ம Google . சமீபத்தில்தான்  நண்பன் பார்த்த எபக்டில், "What is the definition of Figure" என்று type  செய்ய, Google  துப்பியது இது..
   "Figure is a written or printed symbol representing something other than a letter, especially a number".
    ஆக figure  என்பது ஒரு "என்" அல்லது ஒரு "வரைவு". சரி, பிறகு அது ஏன் பெண்களை குறிக்க பயன்படுத்த பட வேண்டும்? இது நேரடியாக தமிழ்நாட்டில் தோன்றியதா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இங்கு இறக்குமதி ஆனதா ? தமிழை தவிர வேறு மொழியில் இவ்வாறு பயன்படுத்தபடுகிறதா?
    ஆராம்பதில் வெறும் இளைஞர்களிடம் மட்டுமே இருந்த இச்சொல் பயன்பாடு தற்போது 6  முதல் 60  வயது வரை அனைவரும் பயன்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர் பழக்க தோஷத்தில், "எனக்கு இரண்டு figure  இருக்கு, மூத்த figure  +2  படிக்குது, ரெண்டாவது figure  10th  படிக்குது" என்று மனைவி முன்னிலையில் சொல்ல, மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, நண்பர் திரு திரு...
   சரி கடைசியா விசயத்துக்கு வருவோம். ஏன் இந்த figure  ஆராய்ச்சி, என்பதற்கு அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த சம்பவமே காரணம்.
    நான் வேலை செய்வது ஒரு accounts  நிறுவனம். எங்கள் மேலதிகாரி எங்களிடம் நீண்ட நாட்களாகவே ஒரு DATA  கேட்டு வந்தார். அதை கொடுப்பதற்கு உடல் உழைப்போடு கொஞ்சம் யோசித்தும் எடுக்க வேண்டி இருந்தததால், நாங்கள் தராமல் இழுத்தடிதுகொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று எங்கள் இருப்பிடத்திற்கு வந்த அதிகாரி கோவத்தில், "I Need that Figure immediately"என்று சத்தமாக 40  பேர் முன்னிலையில் கத்திவிட்டார். அந்த நேரம் பார்த்து அவர் நின்ற எடத்தை ஒருபெண் கிராஸ் செய்ய, அலுவலகமே வேடிசிரிப்பில்  மூழ்கியது. கிட்டத்தட்ட 60  நொடிகள் நீண்ட வெடிசிரிப்பு மெல்ல அடங்கவும் அங்கு ஒரு மயான அமைதி. ஆனால் ஒருவன் மட்டும் friends  பட விஜய் கணக்கா சிரிப்பை அடக்கமுடியாம சிரித்துக்கொண்டே இருந்தான்.கடுப்பிலும், தர்மசங்கடத்திலும் மாட்டிகொண்ட அதிகாரி, "ஏண்டா நான் சரியாதானே பேசினேன்" என்று கேட்க கூட முடியாமல், திரு திருவென முலித்துகொண்டே  அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.  
     அது நடந்து பல நாட்கள் ஆகியும், இன்றும் அந்த அதிகாரி எங்கள் பகுதியை கடக்க நேர்ந்தால், "ஏம்பா, அவுருக்கு அந்த Figura  அனுப்பிசிட்டியா" ?  என்று ஒரு குரல் எங்கிருந்தாவது ஒலிக்கும்.

   

12 comments:

 1. அருமை...நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, எனது எழுத்துக்கு கிடைத்த முதல் பாராட்டு இது.. மிக்க நன்றி.

   Delete
 2. figure'a நல்லா கணக்கு பண்ணுரீங்க பாஸ்.. உங்க 2ம் பதிவு இது... ஆனா, நிறைய பதிவு எழுதின ஆளு மாதிரி அசத்தலா எழுதுரீங்க...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, எனது எழுத்துக்கு கிடைத்த முதல் பாலோவர் . மிக்க நன்றி.

   Delete
 3. Word Verification நீக்கி விடுங்கள்.. இன்னும் நிறைய கருத்துக்கள் இட வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 4. ஆஹா....ஆஹா.... இதுதான் அர்த்தமா??

  //"I Need that Figure immediately"//
  செம காமெடி போஸ்
  பதிவு கலக்கல்

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. பதிவு அருமை... இன்னும் மேலும் பல பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..!!!

  ReplyDelete
 7. ஹி ஹி ஹி ...அருமை...Word Verification நீக்கி விடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. Word Verification எப்படி நீக்கறது ?

   Delete
 8. Very Nice Sathish.you have nice talent. Keep posting.

  -Satish

  ReplyDelete