Sunday, July 29, 2012

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!.

               லிங்குசாமி  தயாரிப்பில் "மைனா" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் "கும்கி". இதன் பாடல்கள் இரு நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சொக்க வைக்கும் மெலோடிகலாக அனைத்தும் அருமை. 


எல்லா ஊரும் எங்களுக்கு !
           படத்தின் கதையையும், நாயகனின் கதாபாத்திரத்தையும் மேலோட்டமாக சொல்லும்படி அமைந்துள்ள இந்த பாடல் கேட்டவுடனே படத்தின் காட்சியமைப்புகள் எப்படி இருக்கும் என்று நாமாக கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும், அழகான ஓபனிங் சாங்.
 
அய்யய்யய்யோ  ஆனந்தமே !(Violin and female)..
                       ஆரம்பத்தில் மிதமாக ஆரம்பிக்கும் வயலின் இசையை கேட்கும்போது உள்ளுக்கும் ஒரு ஆனந்தம் பரவுகிறது, பின்னர் அதனுடன் அதிதி பாலின் குரலும் யுகபாரதியின் வரிகளும் சேரும்போது அப்படியே பரமானந்தம். காதலன் காதலியுடன் ஒரு அழகான கேண்டில் லைட் டின்னரில், மிதமான ஒலியில் இப்பாடல் கேட்டால் ஒரு ரம்மியமான(Romantic) இரவாக அது  அவர்களுக்கு அமையும்.
 
எப்போ புள்ள சொல்ல போற :
      எங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும், இதுவும் ஒரு மிதமான மெலடி !
 
சொல்லிட்டாலே அவ காதல :
        ஒரு பாடல் சிறப்பாக அமைய, ஸ்ரேயா கோஷலின் பீர் சொட்டும் குரலே போதுமானது. இதில் இசையும் வரிகளும் கூடுதல் சிறப்பை சேர்க்க, ஒரு அழகான மெலடி டூயட். 

ரசித்த வரிகள் :
     அப்பன் சொல்ல கேட்கல 
     அம்மா சொல்ல  கேட்கல
      நீ சொல்ல கேட்டேன்,
     ரெண்டு பேர நேருல பாத்தேன்,

இது வரை காதலியை தாயோட மட்டுமே ஒப்பிட்டு வந்தார்கள், இதில் தந்தையுடனும் ஒப்பிட்ட யுகபாரதியின் வரிகள் புதுசு தான !!
 
கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!
        "இமான் - யுகபாரதியின்" மிரட்டும் கூட்டணியில் என்று இனி இவர்கள் போட்டுகொள்ளலாம், சும்மா ரெண்டு பேரும் போட்டி போட்டு பிச்சு உதறியிருக்கிரார்கள்.. பாடலின் முதல்  வரிகளே சொல்கிறதே இதில் யுகபாரதியின் சிறப்பை, கடைசி வரி வரை அனைத்தும் அசத்தல்.  இமானும், இப்பாடலின் ஒட்டு மொத்த ஸ்கோரையும் யுகாவே தட்டி சென்றுவிடக்கூடாது என்று புது புது ஒலிகளுடன் ஒரு வித்தியாசமான இசையை தந்திருக்கிறார். FM உலகை இந்த பாடல் சில நாட்கள் ஆட்சி செய்யும் என்றால் அது மிகையல்ல ! 
 
      மேலும் இரு அழகிய பாடல்களுடன்  இதை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்க வேணாம், கூகுளாண்டவர் உதவியை நாடவும் !

1 comment: